full screen background image
Search
Saturday 19 April 2025
  • :
  • :
Latest Update

விமல் படத்தின் டீசரை 20 லடசம் பேர் பார்த்து சாதனை

விமல் படத்தின் டீசரை 20 லடசம் பேர் பார்த்து சாதனை

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “

விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.. மற்றும்.

ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – நடராஜன் சங்கரன்

பாடல்கள் – விவேகா

கலை – வைரபாலன்

நடனம் – கந்தாஸ்

ஸ்டண்ட் – ரமேஷ்.

எடிட்டிங் – தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி

தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..

சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.

அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்…அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம்.

கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இன்று தியேட்ட்ருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.

இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள்…அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை தான் கதையாக சொல்கிறோம்.

இந்த படத்தின் டீசரை யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்பார்த்தீர்களாகள்.

அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை. டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடை பெற்றது. தென்காசியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

முகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம் இது.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்றார் AR.முகேஷ்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *