full screen background image
Search
Saturday 2 May 2026
  • :
  • :
Latest Update

மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் !

மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் !

இன்று மாலை விஷால் ,ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று நாயகர்களும் ‘வேட்டை நாய் ‘படத்தின் டீசரை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.


சுரபி பிக்சர்ஸ், தாய் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய் ‘. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்க ரமா, நமோ நாராயணன், விஜய் கார்த்திக், மற்றும் பலரும் நடிக்கிறார்கள் .

இப்படத்தை ஜெய்சங்கர் இயக்குகிறார். ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் கணேஷ் இசையமைக்கிறார். தயாரிப்பு P. சுரபி ஜோதிமுருகன், விஜய் கார்த்திக். தன் படத்து டீசரை முன்னணி நாயகர்கள் வெளியிட்டு இருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் பட நாயகன் ஆர்.கே சுரேஷ்.

Vettainaai Teaser #Link 👇




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *