full screen background image
Search
Saturday 12 October 2024
  • :
  • :

SA Chandrashekar launches the motion poster of Santhoshathil Kalavaram

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ‘

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் . .

“ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் ‘தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் ‘என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் “என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்டார். வெளியிட்ட பிறகு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வாழ்த்து குறித்து இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது “எஸ்.ஏ.சி.சார் துணிச்சலான பெரும் புகழ் பெற்ற இயக்குநர். அவர் எங்களை வாழ்த்தியது ஆரே்வதித்தது எங்கள் படக்குழுவிற்கே பெரும் பலம் கிடைத்த உணர்வைத் தருகிறது. ” என்கிறார்.

நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத் , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன்ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை சிவநக் , பாடல்கள் கபிலன் மணி அமுதன் , ப்ரியன் ,எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர் .

. விரைவில் திரைக்கு வருகிறது .

SA Chandrashekar launches the motion poster of Santhoshathil Kalavaram

Maverick filmmaker and multi-faceted personality of Tamil cinema, SA Chandrasekar launched the motion poster of Santhoshathil Kalavaram today. He appreciated the entire team for their creative approach and wished them all the best for the film’s success. Filmmaker Kranthi Prasad says, “To get such wishes from a multi-talented gem of Tamil cinema is a real big blessing for us. This will definitely add more values to the film.”

The film is produced by Thimma Reddy Co – producer kranthi Prasad
under the banner Sri Guru Cinemas and will be hitting screens shortly.

Santhoshathil Kalavaram Motion poster link




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *