full screen background image
Search
Saturday 21 June 2025
  • :
  • :
Latest Update

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் பெப்சி சிவா

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் பெப்சி சிவா


கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரைப்படத் துறையில் தொழிலாளர்களின் நலனுக்காக பல சங்கங்களில் பொறுப்புகளில் பதவி வகித்தவரும், தனம் படத்தை இயக்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர், தற்போதைய அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாமன்றத்தின் தலைவராக பதவி வகித்து வரும் திரு. பெப்சி சிவா அவர்கள் தமிழின போராட்டங்களான நெய்வேலி மற்றும் ராமேஸ்வரம் போராட்டங்கள் போன்று பல்வேறு தமிழின போராட்டங்களை முன் நின்று நடத்தியுள்ளார். திரைப்பட இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களின் தலைமையில் திரு. சீமான், திரு.R. K. செல்வமணி, ஆகியோரோடு தமிழினத்திற்காக தமிழ்நாடு முழுக்க பரப்புரையில் ஈடுபட்டவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு பல கட்டங்களில் ஆதரவாக செயல்பட்டவரும், கலைத்துறையினராலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் திரு.பெப்சி சிவா அவர்கள் இன்று தஞ்சையில் நடைபெற்ற அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தன் ஆதரவாளர்களோடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *