கடலூர் மாவட்டம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் தேவி அறக்கட்டளையும், ஊர் பொது மக்களுடன் சேர்ந்து சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டார்கள் .
நேற்று 23.02.2017 கடலூர் மாவட்டம்,சிதம்பரம் நகராட்சி பரங்கிப்படை ஊராட்சி ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் அவர்களும் அவருடைய தேவி அறக்கட்டளையும், ஊர் பொது மக்களுடன் சேர்ந்து அந்த கிராமத்து விவசாயிகள் பயன் படுத்தும் நெல் களத்தில் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமலும் பாதுகாப்பில்லாமல் முல் புதர்களாக இருந்த சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். அத்தோடு அந்த இடங்களை சுத்தம் செய்து நாட்டு மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.
நடிகர் விஷால் அவர்களுடன் சேர்ந்து நடிகர் செளந்தர்ராஜா , ஹரி உள்ளிட்டோர் அந்த பகுதியை சேர்ந்த ரங்கநாயகி,காளிதாஸ், ரமேஷ், மற்றும் அண்ணாமலை பல்கலை கழகம் துணை வேந்தர் மணியன், கல்வி இயக்குனர் மணிவண்ணன், கிராமத் துறை தலைவர் தேசிகன், பாலமுருகன் இவர்களுடன் NSS மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், கடலூர் மாவட்ட நாடக சங்க உறுப்பினர்கள், ஊர் பொது மக்கள், விஷால் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த சமுக பணியில் ஈடுபட்டார்கள் .
















