full screen background image
Search
Wednesday 6 November 2024
  • :
  • :
Latest Update

Aval Movie News

The pre release buzz of any movie can be gauged by two factors. One is the excitement over the release by the fans of the concerned stars and the other one is number of screens the movie is allotted. ‘Aval’ , a horror flick, starring Siddharth, Andrea and Atul Kulkarni, releasing on November 3rd, is releasing in over whopping 250 screens across Tamilnadu. It is said that this number is the highest ever for a horror movie in Tamil cinema. ‘Trident Arts’ Ravindran, the man behind many successful films of the recent past has pulled off this magic. “As an exhibitor and distributor myself i know the type of films the audience need at any point of time. “Aval” is a classic example of a Horror movie. The audience who had felt inferior watching a Holly wood horror film will come back home collars up after watching “Aval”. The ticket bookings are happening at a rapid pace and the spine chilling ‘Aval’ is well on its way to enthrall the audience from tomorrow “ declared Ravindran with pride. ‘Aval’ is produced by Siddharth under his banner ‘Etaki Entertainment’ along with ‘Viacom18 Motion Pictures’. Milind Rau is the director of ‘Aval’ and has co written ‘Aval’ with Siddharth.

எந்த ஒரு படத்தின் எதிர்பார்ப்பையும் இரண்டு அம்சங்களால் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, அந்த பட நட்சத்திரங்களின் ரசிகர்களிடையே இருக்கும் உற்சாகம். மற்றொன்று அப்படத்திற்கு கிடைக்கும் திரையரங்கு மற்றும் திரைகளின் எண்ணிக்கை. சித்தார்த், ஆண்ட்ரியா மற்றும் அதுல் குல்கர்னி நடித்துள்ள திகில் படமான ‘அவள்’ நவம்பர் 3 ஆம் தேதி அன்று 250 க்கும் மேற்பட்ட திரைகளில் தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு எந்த ஒரு திகில் படத்திற்கும் இவ்வளவு திரைகள் கிடைத்ததில்லை எனக்கூறப்படுகிறது. இந்த அரிய சாதனையை இப்படத்தை ரிலீஸ் செய்யும் ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் செய்துள்ளார்.

”ஒரு விநியோகஸ்தராக இருந்து மக்களின் ரசனையை நன்கு அறிந்துள்ளதால், அவர்களுக்கு எந்த மாதிரியான படங்கள் எந்த சமயத்தில் பிடிக்கும் என்பதை புரிந்துகொண்டுள்ளேன். ‘அவள்’ ஒரு திகிலில் உறைய வைக்கும் படம். ஹாலிவுட் திகில் படங்கள் போல் இங்கு இன்னும் படங்கள் வரவில்லையே என்ற குறையும் ஏக்கமும் உள்ளவர்கள் ‘அவள்’ பார்த்த பிறகு பெருமை கொள்வார்கள். தமிழகமெங்கும் டிக்கெட் புக்கிங் மிக வேகமாக நடந்து வருகிறது. நாளை முதல் தமிழ் சினிமா ரசிகர்களை ‘அவள்’ பயத்தின் உச்சிக்கு கொண்டு போகவுள்ளது ” என பெருமையோடு கூறினார் ‘Trident Arts’ ரவீந்திரன்.

சித்தார்த்தின் ‘Etaki Entertainment’ நிறுவனமும், ‘Viacom18 Motion Pictures’ நிறுவனமும் இணைந்து ‘அவள்’ படத்தை தயாரித்துள்ளனர். இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிலிண்ட் ராவ் ‘அவள்’ படத்தை இயக்கியுள்ளார். மிலிண்ட் ராவும் சித்தார்த்தும் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *