full screen background image
Search
Thursday 27 August 2026
  • :
  • :
Latest Update

Director R.Kannan & Actor Atharvaa Untitled Project

It is always mighty interesting when a commercially proven director joins hands with a young sensation actor.

Director R.Kannan who had proved himself as one of the most trusted commercial director in the arena had another good outing in his last release ‘Ivan Thanthiran’. R Kannan has now joined hands with ever promising and growing Atharvaa. This combination has been seen as a breath of fresh air by the audience and the cinema industry. Speaking about this project, director R.Kannan says, “ This is a very exciting script. It is an out and out action drama with all the commercial ingredients. I am very excited to have Atharvaa play the lead. He fits the role so well and I am very confident this is going to be a special film in his fast growing career. His growing reputation as a hero who can excel in multi genres gives the film a huge boost. We are yet to finalise the heroine and other cast. We are fully immersed in the pre production work now and we are planning to start the shoot from January and aiming a summer release”

‘Arjun Reddy’ music director Radhan has been roped in to do the music of this Atharvaa-Kannan project and Prasanna is the cinematographer.Produced by R Kannan and MK RamPrasad on behalf of Masala Pix and MKRP production, this untitled project begins it’s journey as one of the expected films.

வர்தகரீதியாக நிரூபணமான ஒரு இயக்குனர் மிகவும் நம்பிக்கைக்குரிய கதாநாயகனோடு இணைவது என்றுமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகும். தமிழ் சினிமாவில் வர்தகரீதியாக நிரூபணமாகியுள்ள இயக்குனர்களில் ஒருவர் திரு R.கண்ணன். அவரது முந்தைய படம் ‘இவன் தந்திரன்’ தடைகள் பல தாண்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் வேகமாக பதிந்து வரும் இளம் நாயகன் அதர்வாவோடு இணைந்துள்ளார். திரை உலகில் அதர்வா- R.கண்ணன் கூட்டணி பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் R.கண்ணன் பேசுகையில், ” இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே மிக பொருத்தமாக இருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும். எல்லா தரப்பட்ட கதைகளிலும் ஜொலிப்பவர் என பெயரெடுத்துள்ள அதர்வா இப்படத்திற்கு பலமாக இருப்பார். கதாநாயகி மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம் ”.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இயக்குனர் R.கண்ணனின் ‘Masala Pix’ நிறுவனமும் திரு.M K ராம்பிரசாத் அவர்களின் ‘MKRP’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளன. எதிர்பார்க்கப்படும் படமாக இது மாறியுள்ளது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *