full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

“ஜெல்லியில் பிளாஸ்டிக் கலக்கவில்லை” ; ..விளக்கம்..!

“ஜெல்லியில் பிளாஸ்டிக் கலக்கவில்லை” ; ..விளக்கம்..!

கடற்பாசியையும் பாலாடையையும் பிளாஸ்டிக் என்பதா..?” ; கொதிக்கும் பிளப்பர்ஸ் ஜெல்லி நிறுவனர்

ஜெல்லி பற்றி வெளியான வீடியோவில் துளியும் உண்மையில்லை..!


சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களில் கலர் கலரான ஜெல்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு.. கடற்பாசி மற்றும் பாலாடையைக்கொண்டு உருவாக்கப்படும் இந்தப்பொருள் குழந்தைகளை எந்தவிதத்திலும் பாதிக்காதவண்ணம் உருவாக்கப்படுகின்றன என்று கூறுகிறார் பிளப்பர்ஸ் ஜெல்லி நிறுவனத்தின் எம்.டி. வசந்த்.

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் இந்த ஜெல்லியை பற்றி சில தவறான வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதாவது ஜெல்லியை ஒரு துணியில் வைத்து பிழிந்தவுடன், அந்த துணியில் ஒட்டியுள்ள பொருள் பிளாஸ்டிக் என்றும் அதனால் ஜெல்லி குழந்தைகளுக்கு தீங்கானது என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதில் துளியளவும் உண்மையில்லை என்கிறார் திரு.வசந்த். காரணம் அந்த துணியில் ஒட்டியுள்ளவை கடற்பாசி மற்றும் பாலாடை தான்.. இதைத்தான் பிளாஸ்டிக் என கூறி தவறாக சித்திரிக்கிறார்கள் என கூறியுள்ள அவர் இதை நம்பவேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்., வேண்டுமானால் ஜெல்லியை வாங்கி பிழிந்ததும் இப்படி வரும் கடற்பாசியையும் பாலாடையையும் சுடு தண்ணீரில் போட்டாலே அது பிளாஸ்டிக்கா இல்லையா என்பது தெரிந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

அப்படி ஜெல்லியில் பிளாஸ்டிக் இருக்கிறது என உறுதியாக தெரியும் பட்சத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து உண்மையை சொல்லலாமே.. அதற்கு ஏன் தயங்குகின்றனர்” என கேள்வியும் எழுப்பியுள்ளார் திரு.வசந்த்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *