full screen background image
Search
Sunday 21 June 2026
  • :
  • :

‘மக்கள் தலைவா’ திரைப்பட விமர்சனம்

‘மக்கள் தலைவா’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast

• Ravi Maria
• Radha Ravi
• Akshara Vijay
• Perarasu
• Ramdev
• Nanjil Sampath
• Pazha Karuppaiah
• Kanja Karuppu
• Agni S. Varun
• Kavithalaya Saravanan
• and others

Crew

• Producer – Kavithalaya Saravanan Creations
• Co-Producers – S. Venkatesh, R. Chandrasekar, T. Ramkumar
• Writer & Director – Ramdev
• Cinematography – Karthik S. Nair
• Editing & VFX – S. Durgash
• Music – Thulasi Raman, Amrish P.
• Background Score – Baiju
• Lyrics – Thulasi Raman
• Choreography – Erusan Ji
• PRO – Velu
• Designs – Vijay

சமகால அரசியலையும், பிம்ப அரசியலையும், தேர்தல் அரசியலின் பின்னணியில் நடக்கும் அதிகார விளையாட்டையும் நையாண்டியாக சொல்ல முயற்சித்திருக்கும் படம் ‘மக்கள் தலைவா’

வேலை எதுவும் செய்யாமல், போலி போராட்டங்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தும் தமிழ்க்குடிமகன் என்ற ரவி மரியாவை, வெளிநாட்டில் பெரிய தொழிலதிபராக இருக்கும் ராதாரவி கவனிக்கிறார். மக்களிடையே எளிதாக செல்வாக்கு பெறும் அவரை வைத்து அரசியல் விளையாட்டு நடத்த முடிவு செய்யும் ராதாரவி, முதலில் அவரை சினிமா நடிகராக்கி, பிறகு புதிய கட்சிக்கு தலைவராக மாற்றுகிறார். குறுகிய காலத்திலேயே மக்கள் தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்கும் ரவி மரியா, தேர்தலை சந்திக்க தயாராகும் நேரத்தில் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அதன் பிறகு நடைபெறும் அரசியல் நகர்வுகளே படத்தின் மீதிக்கதை.


கதாநாயகனாக நடித்திருக்கும் ரவி மரியா, தனக்கே உரிய இயல்பான பாணியில் நடித்திருக்கிறார். அரசியல் மேடை பேச்சுகள், நகைச்சுவை காட்சிகள், காதல் பாடல் என பல இடங்களில் தனது வழக்கமான நடிப்பால் கவனம் பெறுகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி, தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் முழு கதையையும் இயக்கும் முக்கிய சக்தியாக இருக்கிறது.

பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். அக்‌ஷரா விஜய் ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுகிறார்.

கார்த்திக் எஸ் நாயரின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் காட்சிகளுக்கு தேவையான தரத்தை கொடுத்திருக்கிறது. துளசிராமனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓரளவு கைகொடுத்திருக்கின்றன. படத்தொகுப்பாளர் துர்கேஷ் படத்தின் நீளத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறார்.

இயக்குநர் ராம்தேவ், இன்றைய தமிழக அரசியல் சூழல், தேர்தல் அரசியல், பிம்ப அரசியல், இலவச வாக்குறுதிகள், மக்களின் மனநிலை போன்ற பல விஷயங்களை துணிச்சலாக பேச முயற்சித்திருக்கிறார். பல இடங்களில் சமகால அரசியலை நேரடியாக நையாண்டி செய்வது ரசிக்க வைக்கிறது. சில வசனங்களும் காட்சிகளும் சிந்திக்கவும் வைக்கின்றன.

ஆனால், நல்ல கருவை எடுத்திருந்தாலும் திரைக்கதை எல்லா இடங்களிலும் ஒரே வேகத்தில் பயணிக்கவில்லை. சில இடங்களில் தேவையற்ற காட்சிகளும், பலவீனமான வசனங்களும் படத்தின் தாக்கத்தை குறைக்கின்றன. கிளைமாக்ஸ் மற்றும் சில திருப்பங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தாமல் போகலாம்.

மொத்தத்தில், ‘மக்கள் தலைவா’ ரவி மரியா மற்றும் ராதாரவியின் நடிப்புக்காகவும், அரசியல் நையாண்டியை ரசிப்பவர்களுக்காகவும் ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *