full screen background image
Search
Friday 19 June 2026
  • :
  • :
Latest Update

DarkGiant திரைப்பட விமர்சனம்

DarkGiant திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew

Sonia Agarwal
K. Bhagyaraj
Livingston
Jovita Livingston
Amudhavanan
Adharsh Mathikanth
Rafiq Batcha

TECHNICAL CREW

Written & Directed by: K. S. Kishaan
Producer: Logeshvaren N
Banner: Biovan Creationism
Music: Vignesh Raja
Cinematography: Sangeeth Manigopal
Editing: G. J. Thiruselvam
Release: 19 June 2026
Genre: Horror Thriller

கடன் சுமையால் வாழ்க்கையே சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் ஆதர்ஷ் மதிகாந்தனுக்கு, திடீரென இதுவரை தெரியாத தாத்தா ஒருவர் தனது சொத்துக்களை எழுதி வைக்க விரும்புவதாக தகவல் வருகிறது. மனைவி மற்றும் தங்கையுடன் சொந்த ஊருக்குச் செல்லும் அவருக்கு, அங்கு காத்திருப்பது சொத்துக்கள் மட்டுமல்ல… மர்மமும், அமானுஷ்யமும் கலந்த ஒரு பயங்கர அனுபவம்.

பராமரிப்பின்றி கிடக்கும் பூர்வீக வீடு, உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு படுத்திருக்கும் தாத்தா, ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் மர்ம சம்பவங்கள் என படம் மெதுவாக பதற்றத்தை கூட்டுகிறது. அங்கிருந்து தப்பிக்க முயலும் குடும்பத்தினரால் அந்த மர்மத்தின் பிடியிலிருந்து விடுபட முடியுமா என்பதே கதையின் மையம்.

நாயகனாக நடித்துள்ள ஆதர்ஷ் மதிகாந்தன், சாதாரண குடும்பத் தலைவனாகவும், பின்னர் அமானுஷ்ய சக்தியின் தாக்கத்தில் மாறும் மனிதராகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பவித்ரா அன்பழகன், ஜோவிதா லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியுள்ளனர். சோனியா அகர்வால், அருவி மதன், லிவிங்ஸ்டன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபாலும், இசையமைப்பாளர் விக்னேஷ்.ஆரும் படத்தின் முக்கிய தூண்களாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக பின்னணி இசையும், இருள் சூழ்ந்த காட்சிகளின் படமாக்கலும் திகில் உணர்வை அதிகரிக்கிறது.

எழுதி இயக்கியுள்ள கே.எஸ்.கிஷன், வழக்கமான ஹாரர் கதையை விட வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஆனால், கிளைமாக்ஸில் கதையை முழுமையாக முடிக்காமல் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டம் போல நிறுத்தியிருப்பது சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். மேலும், தெய்வ சக்தி – சாத்தான் சக்தி மோதலை தவிர்த்து, முழுக்க முழுக்க இருண்ட உலகத்தையே மையப்படுத்தியிருப்பது படத்தின் தனித்துவமாகவும், அதே நேரத்தில் விவாதத்திற்குரிய அம்சமாகவும் மாறுகிறது.

மொத்தத்தில், ‘டார்க் ஜெயன்ட்’ தொழில்நுட்ப பலத்தால் கவனம் ஈர்க்கும் ஹாரர் த்ரில்லராக அமைந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *