full screen background image
Search
Sunday 31 May 2026
  • :
  • :

‘நீளிரா’ திரைப்பட விமர்சனம்

‘நீளிரா’ திரைப்பட ரேட்டிங்: 3/5

CAST

NAVEEN CHANDRA
SANANTH
KAPILA VENU
ROOPA KODUVAYUR
VIDHU
SIDHU KUMARESAN
NAVAYUGA
SWATHI KIRSHNAN
NAMASIVAYAM THAMBIPILLAI
KAYAL VINCENT
Rohit Kokate

CREW

Written And Directed By : SOMEETHARAN
DOP : SELVARATNAM PRATHEEPAN
Editor : RADHA SRIDHAR
Music : K
Art : MARTIN
Sound Design & Mix : TAPAS NAYAK
Stunts : DINESH SUBBARAYAN
Co Director : VICKY
Costumes : SUBAIR – THARANKENI
Trailer and Promo : B PRAVIN BAASKAR
Title Design : GIBSON UGA
Publicity Design : TUNEYJOHN-24AM
PRO : Nikil Murukan.
Production coordinator : R RAJ KUMAR – MADHAN SHANMUGAM
Production Manager : NIRMAL KUMAR
Executive Producer : ASHOK NARAYANAN
Associate Producer : PAVAN NARENDRA – ARULMOZHITHEVAN KALIMUTHU
CO – PRODUCED BY RANA DAGGUBATI – KALYAN SUBRAMANIAN
PRODUCED BY Stone Bench Studio KAARTHIKEYAN S – KARTHIK SUBBARAJ.

‘நீளிரா’ இலங்கையில் 1980களின் இறுதியில் நடந்த போர் சூழலை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு உணர்ச்சி மிகுந்த படம். நீளிரா என்றால் நீண்ட இரவு என்று பொருள். இந்த படம் முழுவதும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. போர் பற்றி மட்டும் அல்லாமல் போரின் நடுவில் சிக்கி வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த படம் மிகவும் உண்மைக்கு நெருக்கமாக காட்டுகிறது.

கதை இலங்கையில் ஒரு கிராமத்தில் நடக்கிறது. ஒரு குடும்பத்தில் மறுநாள் திருமணம் நடக்க இருக்கிறது. அந்த திருமணத்தை நடத்த கூட இந்திய அமைதிப்படை மற்றும் இலங்கை ராணுவத்திடம் அனுமதி பெற வேண்டிய சூழல். திருமணத்திற்கு முந்தைய இரவு இந்திய அமைதிப்படை வீரர்கள் தவறான தகவல் காரணமாக அந்த வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். வெளியே போராளிகள் சுற்றி இருப்பதால் அவர்கள் அந்த வீட்டுக்குள் தங்கி விடுகிறார்கள். ஒரு பக்கம் துப்பாக்கி ஏந்திய ராணுவம் வீட்டுக்குள், இன்னொரு பக்கம் வெளியே போராளிகள், நடுவில் பயத்தில் இருக்கும் ஒரு தமிழ் குடும்பம். அந்த ஒரு இரவு எப்படி கடக்கிறது, திருமணம் நடந்ததா இல்லையா, அந்த குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

இந்த படம் பெரிய சண்டை காட்சிகள் இல்லாமல் இருந்தாலும் முழு படமும் பதட்டமாகவே இருக்கும். வெளியே துப்பாக்கி சத்தம், உள்ளே பயம், உயிர் பிழைக்க வேண்டிய நிலை, பெண்களின் பாதுகாப்பு பயம், குடும்பத்தின் கவலை, ராணுவத்தின் அழுத்தம் எல்லாம் மிகவும் இயல்பாக காட்டப்பட்டுள்ளது. போரின் அரசியல் பற்றி அதிகமாக பேசாமல், போரால் பாதிக்கப்படும் சாதாரண மக்களின் வாழ்க்கையை தான் படம் பேசுகிறது.

நவீன் சந்திரா அமைதிப்படை அதிகாரியாக நல்ல நடிப்பு கொடுத்துள்ளார். கடமைக்கும் மனிதாபிமானத்திற்கும் நடுவில் சிக்கிய மனிதராக அவர் நடித்திருப்பது நன்றாக இருக்கிறது. ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், கபிலா வேணு மற்றும் மற்ற நடிகர்கள் எல்லாரும் அந்த குடும்பமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் போல தெரிகிறது. யாரும் நடிகர்கள் போல தெரியவில்லை, அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் போலவே இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இந்த படத்தின் மிக பெரிய பலம். இரவு நேர காட்சிகள் மிகவும் இயல்பாக எடுத்துள்ளனர். பின்னணி இசை படத்தின் பதட்டத்தையும் உணர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. படம் சுமார் 90 நிமிடங்கள் தான் இருந்தாலும் சலிப்பு இல்லாமல் நேராக கதைக்குள் கொண்டு செல்கிறது.

மொத்தத்தில், ‘நீளிரா’ போரின் நடுவில் சிக்கிய சாதாரண மக்களின் பயம், வலி, நம்பிக்கை, மனிதநேயம் ஆகியவற்றை அமைதியாகவும் ஆழமாகவும் சொல்லும் படம். மெதுவான ஆனால் மனதில் நீண்ட நேரம் நிற்கும் படம் நீளிரா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *