full screen background image
Search
Friday 24 July 2026
  • :
  • :
Latest Update

‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்பட விமர்சனம்

‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast: Santosh Soban, Manasa Varanasi, Yogi Babu, Sunil Reddy.

Crew: Produced by Ajay Kumar Raju P (UV Creations) | Tamil Nadu Rights – Think Studios | Written & Directed by Ashwin Chandrasekar | DOP – Dinesh Purushothaman | Music – Aditya Ravindran | Editor – Ganesh Siva | Art – Micheal | PRO – Sathish Kumar (S2 Media).

‘Couple Friendly’ சென்னை பின்னணியில் நடக்கும் இந்த கதை, வாழ்க்கையில் செட்டில் ஆக போராடும் இரண்டு இளைஞர்களின் பயணத்தை சொல்கிறது இப்படம்.

நாயகன் சிவா ஒரு Interior designer ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால் வேலை கிடைக்காமல் போராடுகிறார். செலவுகளை சமாளிக்க பைக் டாக்ஸி ஓட்டுகிறார். அதே சமயம் நாயகி மித்ரா ஐடி வேலைக்காக சென்னை வருகிறார். ஹோஸ்டல் பிரச்சனை, வேலை நிச்சயமில்லாத நிலை, குடும்ப அழுத்தம் என நாயகியும் சிரமத்தில் இருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்திக்கிறார்கள். அந்த நட்பு மெதுவாக நெருக்கமாகி, ஒரே வீட்டில் தங்கும் Live-in Relationships உறவாக மாறுகிறது. அங்கிருந்து அவர்களின் காதல், சண்டைகள், கனவுகள், குடும்ப எதிர்ப்பு, ஒரு எதிர்பாராத திருப்பம் ஆகியவை கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.

படத்தின் பெரிய பலம் முதல் பாதி தான். சிவா மற்றும் மித்ராவின் வாழ்க்கை போராட்டங்கள் மிகவும் இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது. வேலைக்காக அலையும் இளைஞர்கள், பணத்தட்டுப்பாடு, குடும்ப அழுத்தம் போன்ற விஷயங்கள் நடைமுறை வாழ்வில் ரிலேட் ஆகும் வகையில் இருக்கிறது. இரு மொழி படமாக இருந்தாலும் சென்னையில் பல இடங்கள் லைவ் லொகேஷன்களில் படமாக்கியது, தமிழ் பேசும் சூழல் வைத்திருப்பது படத்திற்கு நேரடி தமிழ் படம் போல் இயல்பான உணர்வை தருகிறது. சிவா மற்றும் மித்ராவின் நட்பு காதலாக மாறும் விதம் மெதுவாகவும் நம்பகமாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சிரிப்பும் சின்ன சின்ன உணர்ச்சிப் தருணங்களும் நன்றாக காதல் ரசனையோட சொல்லப்பட்டிருக்கிறது.

சாந்தோஷ் சோபன்-> ஹீரோ சிவா கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார். வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞனின் குழப்பம், தாழ்வு உணர்வு, முயற்சி எல்லாம் நன்றாக வெளிப்படுத்துகிறார்.

மனசா வரணாசி-> நாயகி மித்ரா கதாபாத்திரத்தில் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இயல்பான நடிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு, திரையில் இருக்கும் உயிர்த்துடிப்பு எல்லாம் கவனம் ஈர்க்கிறது. இருவரின் கெமிஸ்ட்ரி தான் படத்தை முன்னோக்கி இழுத்துச் செல்கிறது. யோகி பாபு மற்றும் பெற்றோர் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தேவையான அளவு கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளுடன் கலந்தே செல்கிறது. பெரிய ஹிட் பாடல்கள் இல்லாவிட்டாலும், உணர்ச்சிகளை தூண்டும் அளவுக்கு இருக்கிறது. ஒளிப்பதிவு லைட்டிங் மற்றும் காட்சி அமைப்புகள் பல இயல்பாக உள்ளது.

ஆனால் இரண்டாம் பாதி சற்று மெதுவாக செல்கிறது. ஒரு முக்கிய திருப்பம் திடீரென வருவது போல உணரப்படுகிறது. அதே உணர்வில் படம் தொடரும் என எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். குடும்ப டிராமா மற்றும் உணர்ச்சி காட்சிகள் சில இடங்களில் இயல்பாக இல்லாமல் செயற்கையாக தெரிகிறது. சிலருக்கு இது ஏற்கனவே பார்த்த கதையை நினைவூட்டும். குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதிகளில் பரிச்சயமான உணர்வு வருகிறது. இருந்தாலும் உணர்ச்சி ரீதியாக வேலை செய்யும் தருணங்கள் இருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘Couple Friendly’ இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை, live in relationship, கனவுகள், குடும்ப எதிர்பார்ப்பு ஆகியவற்றை உணர்ச்சியுடனும் அதேசமயம் 2k kids, GenZ காலத்திற்கேற்ப வந்திருக்கும் நல்ல காதல் படம். இந்த Valentine’s Day-க்கு வெற்றி அடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *