full screen background image
Search
Thursday 2 April 2026
  • :
  • :
Latest Update

‘பிபி180’ (BP180) திரைப்பட விமர்சனம்

‘பிபி180’ (BP180) திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Tanya S Ravichandran, Daniel Balaji, K.Bhagyaraj, Aruldoss, Tamizh, Nayana Sai, Swetha Dorathi, Jack Arunachalam, Ranga

Directed By : JP

Music By : Ghibran Vaibodha

Produced By : Radiant international films & Atul India Movies – Pratik D chhatbar, Atul M Bosamiya.

சென்னை காசிமேடு Government Hospital-ல் வேலை பாரும் மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன் ஒரு நேர்மையான, தைரியமான பெண். பெரிய அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ, போலீஸ் இன்ஸ்பெக்டர் யாரும் மிரட்டினாலும், சட்டப்படி செய்ய வேண்டிய பணியை நேராக செய்து முடிக்கிறார். இதே நேர்மைதான் அவரை வடசென்னையின் மிக ஆபத்தான ரவுடி டேனியல் பாலாஜியின் ரேடாரில் தள்ளுகிறது.

பாக்கியராஜ் என்ற அதிகாரசாலி தனது மகள் விபத்தில் இறந்ததும், அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவருகிறது. இதை வெளியேறாமல் தடுக்க தான்யாவிடம் போஸ்ட்மார்டம் செய்யாமல் உடலை தரும்படி கேட்கிறார். தான்யா முற்றாக மறுப்பதால், பாக்கியராஜ் ரவுடி பாலாஜியை அழைத்து தான்யாவை மிரட்ட சொல்லுகிறார். அங்கிருந்து தான்யாவின் வாழ்க்கை ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறது.

பாலாஜியின் அடாவடிகளும், மிரட்டல்களும், தான்யாவைத் தடுப்பதற்காக அவர் அருகில் உள்ளவர்களை கூட கொன்று குவிப்பதும் படம் முழுவதும் பதற்றத்தை உருவாக்குகிறது. காவல்துறை ஆணையரே அவரை நேரில் அழைத்து எச்சரித்தாலும், பாலாஜி அதை கூட பொருட்படுத்தாத அளவுக்கு ஈகோவானவனாக காட்டப்படுகிறார். தான்யா – பாலாஜி மோதல் தான் படத்தின் முழு விறுவிறுப்பு.

தான்யா ரவிச்சந்திரன், இந்த கதையின் உயிரே என்று சொல்லலாம். எந்த சூழலிலும் அஞ்சாமல் தன் பணியை நேர்மையாகச் செய்யும் பெண்ணின் மனநிலையை அவர் மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். பாலாஜியின் மிரட்டல்களுக்கு இடையிலும் தன் மருத்துவ பணியையே முன்னிலைப்படுத்தும் காட்சிகள் நன்றாக பட்டிருக்கின்றன.

டேனியல் பாலாஜி, காசிமேடு ரவுடி அர்னால்டு ரோலில் ஓவராக இருந்தாலும், அந்த கேரக்டரை முழுமையாக உடம்பேறிப் போல் நடித்து காட்டிருக்கிறார். ஒரு பெண் அவர் அகம்பாவத்தைக் கிழிக்கும் காட்சிகளில் அவர் காட்டும் கோபம், அவமானம்—all perfectly done.

பாக்கியராஜ் வேடத்தில் ஜெராக்டர் கே.பாக்கியராஜ், தனது மகளைப் பார்த்து கதறும் காட்சி உணர்ச்சியை நன்றாக கொண்டு சேர்க்கிறது. மற்ற supporting characters—அருள்தாஸ், தமிழ், ஜாக் அருணாச்சலம், ஸ்வேதா டோரத்தி, ரங்கா, நயனா—all did what they have to.

ஜிப்ரானின் BGM படம் முழுவதும் tension feel-ஐ வைத்துக்கொள்கிறது; ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு இருளும், ரவுடி சூழலும், hospital mood-ஐ மிக நிஜமாக காட்டுகிறது.

இயக்குனர் ஜெ.பி, முதல் பாதியில் strong setup கொடுத்து, தான்யா–ரவுடி மோதலை நன்றாக build செய்து இருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் சில logical issues மற்றும் commercial elements கதையை சற்றே சிதறடிக்கின்றன. குறிப்பாக, ரவுடி ஒருவன் காவல்துறை ஆணையரை overpower செய்வது ரியாலிட்டியைத் தாண்டிச் செல்கிறது. ஆனாலும் climax–ல் நல்ல emotional closure கொடுத்திருப்பது படத்தை மீண்டும் உயர்த்துகிறது.

மொத்தத்தில்,இந்த ‘பிபி 180’ தைரியமான பெண் மருத்துவரும், ego கொண்ட ரவுடியுமே மோதும் ஒரு intense thriller.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *