‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : RishabShetty, Rukmini Vasanth, Jayaram, Gulshan Devaiah
Directed By : Rishab Shetty
Music By : B Ajaneesh Loknath
Produced By : Hombale Films – Vijay Kiragandur
கடந்த 2022 ல் வெளிவந்த காந்தாரா படத்தின் தொடர்ச்சி போல அல்லாமல் அந்தப் படத்தின் முந்தைய பகுதி போல இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த தெய்வ சக்தி என்பது எப்படி அந்த மக்களுக்குள் வருகிறது என்பதை ஆதி கால கதையாக சொல்லப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரப் பூந்தோட்டம் என்ற காட்டுப்பகுதி எல்லோரும் விரும்பும் ஒரு காட்டுப் பகுதியாக இருக்கிறது. அந்த இடத்தை கைப்பற்ற ஒரு மன்னர் வகையறாவும் சில நபர்களும் போட்டி போடுகின்றனர். அந்த இடம் தெய்வாம்சம் நிறைந்த பகுதி என்பதால் அந்த இடத்திற்கு, அதிகப் போட்டி இருக்கிறது.
அந்த ஈஸ்வர பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹீரோ ரிஷப் செட்டி, எல்லா கயவர்களிடமிருந்து அந்த பகுதியை காப்பாற்றுவது தான் கதை.
படத்தின் முதல் பாதி ரொம்ப ரொம்ப ஜவ்வாக இழுவையாக இருந்தது. எத்தனையோ படங்களில் பாதியில் எழுந்து வந்திருக்கிறேன் ஆனால் எந்த படத்திற்கு தியேட்டரில் தூங்கியதில்லை. முதல் பாதியில் இடை இடையில் தூக்கம் வந்துவிட்டது. ரொம்ப ஜவ்வாக இருந்தது முதல் பாதி. ஜவ்வா இருந்தும் தூங்கிக் கொண்டு உட்கார்ந்து இருந்ததற்கு காரணம் இரண்டாம் பகுதி எல்லோரும் நன்றாக இருக்கிறது என சொன்னதால்தான்.
இடைவேளைக்குப் பிறகு படம் சூப்பர் என நிறைய பேர் எழுதியிருந்தார்கள் ஆனால் இடைவேளைக்குப் பிறகும் படம் வேகம் எடுக்க ஒரு 25 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. அப்புறம் கடைசி வரை வேகம்தான் எந்த ஒரு ஸ்லோவான காட்சிகளும் இல்லை.
தமிழ்நாட்டில் கண்டிப்பாக இப்படி எல்லாம் படம் எடுக்க போவது யாரும் கிடையாது. தமிழில் ஒரு காலத்தில் ஏபி நாகராஜன், ராமநாராயணன், இறையருள் இயக்குனர் சங்கர், ஓம் சக்தி ஜெகதீசன், இப்படி பக்தி படங்களை இயக்குவதற்கென்று எண்ணற்ற இயக்குனர்கள் இருந்தார்கள் இப்போது யாருமே கிடையாது.
பக்தி என்றாலே மூடத்தனம் என்பது போல ஆக்கிவிட்டு, ஒரே வன்முறை நிறைந்த படங்களாக தமிழில்எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்திற்கு பூஜை போடுவது மட்டும் எல்லா சாமியின் புகைப்படங்களை வைத்து பூஜை போடுகிறார்கள். மற்ற மொழிகளில் எல்லாம் கடவுள் நம்பிக்கை சார்ந்த படங்கள் அதிகம் வருகிறது அது பிரமாண்ட படங்களாக வருகிறது ஆனால் தமிழில் அப்படி வருவதே இல்லை அதற்கு இயக்குனர்களும் தமிழில் இல்லை இல்லை.
இப்படத்தில் பாதி பகுதி மெதுவாக நகர்வது போல் இருந்தாலும் பிற்பகுதி வேகமாக நகர்கிறது. Divine எனப்படும் பக்தி பரவச நிலையை இப்படத்தில் பல இடங்களில் இப்படம் தந்தாலும், அந்தக் காந்தாரா ஸ்டைல் அந்த கத்திக்கொண்டே இருப்பதை மட்டும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். ஏனென்றால் பக்தி என்பதே அமைதி வழிபாடு தான் அதை இப்படி கத்திக் கொண்டே இருப்பது போல் படம் முழுக்க காண்பித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.
அந்தக் காட்சிகளை வேறு மாதிரி ஏதாவது சுவாரஸ்ய படுத்திருக்கலாம், ரிசப் செட்டி அந்த சிவ உணர்வுடன் சிவ ரூபமாக அலறிக் கொண்டே இருக்கிறார். அந்தக் காட்சிகள் வேகமாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அமைதிப்படுத்தி அந்த காட்சிகளை எடுத்திருக்கலாம், அல்லது வேறு ஏதாவது ஒரு மாதிரி உக்கிரமாக அந்த காட்சிகளை எடுத்திருக்கலாம் இந்த கத்துவது போல் உள்ள காட்சி காந்தாரா படத்தில் இடம்பெற்ற காட்சி அதையே திருப்பி திருப்பி ரிப்பீட் செய்வது தான் ஒரு சின்ன மைனஸ். மற்றபடி படம் நன்றாகவே உள்ளது.
அந்த காந்தாரா படத்தில் வரும் வராக ரூபம் பாடலில் வரும் இசை,அந்தப் பின்னணி இசை இதையெல்லாம் கொஞ்சம் மாற்றி இந்த படத்திற்கு என தனியாக மெனக்கெட்டு இசை அமைத்திருக்கலாம். அதை இதிலும் தொடர்வது தான் கொஞ்சம் நெருடல்.
காந்தாரா முதல் பாகத்தை விட இப்படம் பெரிய அளவில் என்னை கவரவில்லை. ஆனால் இடைவேளைக்கு பின்பு வரும் படத்தின் காட்சி அமைப்புகள், சிவ ரூபம்போல் மாரி ரிசப் செட்டி செய்யும் சாகசங்கள் ரொம்ப ஒரு பக்தி பரவச நிலைக்கு எல்லாரையும் கொண்டு செல்லும் எல்லோரையும் வேகப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்ல இதுபோல பக்தி படங்கள் எடுப்பதற்கு யாரும் கிடையாது அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வந்தாலும் இதுபோல பக்தி படங்கள் வரவு தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை. ஏனென்றால் தமிழ் சினிமா இயக்குனர்கள் பல வருஷத்துக்கு முன்பு எடுத்த இந்த கத்தி துப்பாக்கி இதையெல்லாம் கீழே போடவே இல்லை இது போல பக்தி படங்கள் அவசியம் எல்லோருக்கும் தேவை.
படத்தில் நடித்துள்ள ரிசப் செட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம் அனைவரும் தன் பாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து நடித்துள்ளனர் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் அதில் மாற்றுக் கருத்து இல்லை.
மொத்தமா, “காந்தாரா – அத்தியாயம் 1” காட்சிகள் பிரமாண்டமாக இருந்தாலும், கதை சுவாரஸ்யமில்லாததால் முழுமையாக கவரவில்லை.