full screen background image
Search
Thursday 18 September 2025
  • :
  • :
Latest Update

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா !!

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா !!

திரைப்பட விநியோக நிறுவனமான உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின், புதிய அலுவலகம் சென்னையில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது !!

தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க வெளியீடு விநியோகம் செய்யும் “உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர்
செ.ஹரி உத்ரா புதிய அலுவலகம் சென்னை வடபழனி பகுதியில், வேலாயுதம் காலனி யில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது.

சிறு திரைப்படங்களில், வித்தியாசமான வெவ்வேறு கதைக் களங்களில் மாறுபட்ட படைப்புகளை உருவாக்கி வரும் படைப்பாளிகள், சிறு படதயாரிப்பாளர்கள் அத்திரைப்படங்களை திரையரங்கில் வெளியீடு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும், தமிழ்நாடு , கேரளா , கர்நாடகம் போன்ற பகுதிகளில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், இத்தகைய படங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்து வருகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் செ.ஹரி உத்ரா அவர்கள், Gentle Women , கெவி , தூக்கு துரை , குற்றம் புதிது தமிழ் திரைப்படங்களையும், Jijo George நடித்த ஆரோ , Asif Ali யின் ரஞ்சித் சினிமா , அன்போடு கண்மணி ஸ்ரீலங்கன் சுந்தரி போன்ற மலையாளத் திரைப்படங்களையும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியீடு செய்துள்ளது…

மேலும் இந்நிறுவனம் சார்பில் Maria , YELLOW என அடுத்தடுத்து பல படங்களை வெளியிட மும்முரமாக பணியாற்றியும் வருகிறார். இதுவரை 2023, 2024, 2025 ஆகிய 3 ஆண்டுகளில் முறையே சுமார் 45க்கும் அதிகமான படங்களை திரையரங்குகளில் வெளியீடு செய்து புதுப்பட தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்துள்ளது இந்நிறுவனம்.

இந்நிறுவனம் திரையரங்கு வெளியீடு மட்டுமல்லாது, Amazon Prime , AHA , TENTKOTTAI , SUN*NEXT முதலான ஓடிடி தளங்களில், படங்களை விற்பனை ,FMS,Hindi,Other Languages, சாட்டிலைட் உரிமைகளையும் விற்றுத் தந்து, தயாரிப்பாளர்களுக்கு லாபம் பெற்றுத் தந்து வருகிறது. புதுப்பட தயாரிப்பாளர்கள் எளிதில் அணுகும் வண்ணம், இந்நிறுவனத்தின் அலுவலகம் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்டு பிரபலங்கள் மற்றும் பெரியவர்களின் ஆசியுடன் புதிய அலுவலகம் திறப்பு விழா இனிதே நடைபெற்றது…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *