‘படை தலைவன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Shanmuga Pandiyan Vijayakanth, Kashthuri Raja, Yamini Chander, Munishkanth, Karudan Ram, Rishi, A.Venkatesh, Yugi Sethu, Sreejith Ravi, Arul doss, Logu NPKS
Directed By : U.Anbu
Music By : Ilaiyaraaja
Produced By : VJ Combinesm, Dass Pictures – Jaganathan Paramasivam
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் படைத்தலைவன். இயக்குனர் அன்பு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக யாமினி சந்தர் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜெகநாதன் பரமசிவன் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசைஞானி இசை அமைத்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் கஸ்தூரிராஜா, முனிஸ்காந்த், கருடன் ராம், அருள் தாஸ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் ஹீரோ சண்முக பாண்டியன், காட்டில் வாழும் யானையை பயிற்றுவிப்பவராக இருக்கிறார். அவருடைய யானையினுடைய பெயர் மானியன். அவர் தன்னுடைய மானியனை குழந்தை போல பராமரித்து வருகிறார். அவருக்கு யானை தான் நண்பன், குடும்பம், வாழ்க்கை என எல்லாமே நினைத்து வாழ்கிறார்.
ஒரு நாள் சில தங்க திருடர்கள், கடத்தல்காரர்கள் மானியனை காட்டிலிருந்து கடத்தி சென்று போகிறார்கள்.
இதை அறிந்த சண்முக பாண்டியன் அதிர்ச்சியாகிறார்.
பின் எப்படியாவது மானியத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார். ஒன்றுமே தெரியாமல் இந்த பயணத்தை சண்முக பாண்டியன் தொடங்குகிறார். அதில் விலங்குகள், வஞ்சகர்கள், பிரச்சனைகள் என தொடர்ந்து பல சிக்கல்களில் சண்முக பாண்டியன் சிக்கி கஷ்டப்படுகிறார். இருந்தாலுமே அவர் உறுதியுடன் போராடுகிறார். இதற்கிடையில் ஒரு காட்சியில் விஜயகாந்த்தும் அவருக்கு உதவி செய்கிறார். இறுதியில் தன்னுடைய மானியத்தை சண்முக பாண்டியன் எப்படி கண்டுபிடிக்கிறார்? எதற்காக மானியத்தை கடத்தி சென்றார்கள்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் ஹீரோ சண்முக பாண்டியன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைப் பார்க்கும்போது விஜயகாந்தினுடைய வெர்ஷனை பார்ப்பது போலவே இருக்கிறது. நடை, பார்வை, சண்டை என எல்லாமே கேப்டன் ஆகவே முயற்சி செய்து இருக்கிறார் சண்முக பாண்டியன். இயக்குனர் கதைக்களத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளுமே பிரமிக்க வைக்கும் அளவிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறார். ஆனால், இந்த படம் கும்கி படத்தின் உடைய சாயலாகவே இருந்தது தான் ஒரு மைனஸ்.
விலங்குகள் தான் முக்கியம் என்பதால் படத்தில் நடிகர்கள் பெரிதாக இல்லை. நடித்த நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்தில் மிகப்பெரிய பலத்தை கொடுத்து இருக்கிறது. கிளைமாக்ஸ் கூட நிறைய டீவ்ஸ்ட் இயக்குனர் வைத்திருக்கிறார். இளையராஜாவின் இசையும் படத்திற்கு கூடுதல் படத்தை கொடுத்திருக்கிறது.
அதேபோல் விஜயகாந்த் வரும் காட்சியும் நன்றாகவே இருந்திருக்கிறது.
சில வசனங்கள், சில காட்சிகள் அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.திரைக்கதை நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம். முதல் பாதி நேர்த்தியாக இருந்தாலும். இரண்டாம் பாதியில் கதை எங்கேயோ செல்வது போல இருக்கிறது. அதேபோல் நடிகர்கள் தேர்வில் இன்னும் கொஞ்சம் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் சுமாரான படமாக தான் இருக்கிறது.
மொத்தத்தில், ‘படை தலைவன்’ வீரியம் இல்லை.