பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூல் : ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ் திரையுலகின் பொதுஜன தொடர்பாளர் என்கிற பெருமைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பேசும் படம் தொடங்கியது முதல் அவர் மறையும் வரையிலான திரைப்பட புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து “சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” என்கிற நூலினை தமிழக அரசின் உதவியுடன் வெளியிட்டார். தமிழ்த் திரையுலகில் தகவல் களஞ்சியமாக திகழும் அந்தப் புத்தகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. முத்தமிழ் அறிஞர் கலைஞரைப் பற்றிய ஒரு தொகுப்பு முக்கியமான நூலாகும். தமிழ்த் திரையுலகில் வசனகர்த்தவாக, பாடல் ஆசிரியராக, தயாரிப்பாளராக சரித்திரம் படைத்தவர் கலைஞர். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் என்றும் நினைவில் வாழும் ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் எழுதிய ‘கலைஞர் 100’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது முகாம் அலுவலகத்தில் வெளியிட்டார். பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் டைமண்ட் பாபு நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்து பெற்றார்.