full screen background image
Search
Tuesday 10 December 2024
  • :
  • :
Latest Update

“RK Vellimegam” Movie Audio & Trailer Launch

சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில்
Sainu Chavakkadan
இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும்
ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் விருகம்பாக்கம் MLA
AMV.பிரபாகர்ராஜா
சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர்
ஆர்.கே.அன்புச்செல்வன் இந்திய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஆனந்தமுருகன்
தயாரிப்பாளர் ARK.ராஜராஜா நடிகர்கள்
காதல் சுகுமார்
அப்புகுட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர்
ஆர்.கே. அன்புச்செல்வன் பேசுகையில்
கேரளாவில் இருந்து வந்து தமிழ் படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
எந்த ஒரு படத்தையும் யாரும் தடை செய்வதற்கு இங்கு உரிமை இல்லை அப்படி தடை செய்தால் நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் தக்க நடவடிக்கை எடுப்பேன். ஆர்ட் டைரக்டர் யூனியன் திருவள்ளூர் அருகே யோகி பாபு நடிக்கும் திரைபடத்தின் படப்பிடிப்பை நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பேசினார்.
எம் எல் ஏ
AMV. பிரபாகர்ராஜா பேசுகையில்
திரைத்துறையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம்.
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களும் திரைப்படத்துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல
நல்வழிகளை செய்யும் ஒரு ஊடகமாகும் என்று கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *