‘தீயவர் குலை நடுங்க’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Arjun, Aishwarya Rajesh, Abhirami Venkatachalam, Praveen Raja, Logu. Npks, Ram Kumar, Thangadurai, Baby Anikha, Prankster Rahul, Priyadarshini, Syed, G.K. Reddy, P.L.Thenappan, O.A.K.Sundar, Vela Ramamoorthy, Padman
Directed By : Dinesh Lakshmanan
Music By : Bharath Aaseevagan
Produced By : GS Arts – G.Arulkumar
சென்னையில் தொடர்ந்து கொலைகள் நடக்க, போலீஸ் டிபார்ட்மெண்ட் முழுக்க பதட்டமாகிப் போயிடுறது. முதல்ல ஒரு எழுத்தாளர் கொலை செய்யப்படுறார். இதைப் பற்றி விசாரிக்க அர்ஜுன், தங்கதுரை உடன் தனது டீமோடே விசாரணை தொடங்குறார். விசாரணை போகப் போக குற்றவாளி யார்? ஏன் இந்தக் கொலைகள்? அவனை பிடிக்க முடிகிறதா இல்லையா? என்பதுதான் கதையின் மொத்த ஓட்டம். இதோடவே மனநலம், ஆட்டிசம் போன்ற பிரச்சினை உள்ள குழந்தைகள் மீதான கொடுமைகள் பற்றியும் படம் பேசுறதுனால ஒரு சமூக அக்கறையும் இருக்கு.
படத்துக்கு முன்னாடி வெளியான sneak peak, trailer எல்லாம் நல்ல எதிர்பார்ப்பு உண்டாக்கின. “அர்ஜுனுக்கு செம ரோல், solid thriller வரும் போல”ன்னு பலரும் நினைச்சாங்க. ஆனா படம் அதுக்கு சரியா set ஆகல. Theeyavar Kulai Nadungaன்னு பவர்ஃபுல் title வைத்திருந்தும், ‘தீயவன் நடுங்குறான்’ன்னு feel அதிகமா வராது.
பரத் ஆசிவகனின் BGM ரொம்ப நல்லா இருக்கு — tension scenes-க்கும் mood build பண்ணுறதுக்கும் செமா வித்தியாசம் காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு குறிப்பாக கட்டிடங்களுக்குள் நடக்கும் sequences-ல நல்லா காட்சிப்படுத்திருக்கிறார்.
ஆனா பெரிய problem screenplay. ஒரு உண்மை த்ரில்லருக்கு வேண்டிய வேகம், suspense, twist எல்லாம் consistently வரல. கதை எழுதுறதில் கொஞ்சம் கூட கவனம் இருந்தா படம் இன்னும் வேற லெவலா இருக்கும்.
மொத்தத்தில் — பார்க்கக்கூடிய அளவுக்குத் தான் இருக்கு… ஆனா ஒரு பலமான த்ரில்லராக தாக்கம் இல்ல.




















