full screen background image
Search
Wednesday 24 June 2026
  • :
  • :
Latest Update

‘TEST’ திரைப்பட விமர்சனம்

‘TEST’ திரைப்பட ரேட்டிங்:3.5/5

Casting : Madhavan, Nayanthara and Siddharth, Meera Jasmine, Kali Venkat, Aadukalam Murugadass

Directed By : S.Sashikanth

Music By : Shakthisree Gopalan

Produced By : Chakravarthy Ramachandra & S.Sashikanth

கிரிக்கெட் விளையாட்டுகளில் சில சமயங்களில் நடப்பதாக சொல்லப்படும் மேட்ச் பிக்சிங் என்ற சூதாட்டத்தை மையப்படுத்தி வந்துள்ள படம் டெஸ்ட். சசிகாந்த் இயக்கத்தில், நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஜ்மின் நடித்துள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரரான சித்தார்த் சில மேட்ச்களில் வெற்றி பெறாததால் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற சொல்கிறது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சில் மட்டும் இறுதியாக கலந்துகொள்ளுமாறு சொல்கிறது வாரியம். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் சித்தார்த்.

விஞ்ஞானியாக இருக்கும் மாதவன் தண்ணீர் மூலம் வாகனம் ஓட்டும் கருவி ஒன்றை கண்டு பிடிக்கிறார். இதற்கு அங்கீகாரம் கேட்டு அரசை அணுகும் போது ஐந்து கோடி வரை லஞ்சம் கேட்கிறார்கள். இந்த பணத்தை சம்பாதிக்க சித்தார்த் மகனை கடத்தி வைத்து கொண்டு, மேட்ச் பிக்சிங் செய்யும் நபருடன் இணைந்து, சித்தார்திடம் மேட்சில் தோற்கும் படி பிளாக் மெயில் செய்கிறார். சித்தார்த் என்ன செய்தார்? மகன் மீட்கப்பட்டானா என்று சொல்கிறது இந்த டெஸ்ட் மேட்ச்.

இந்தியா பாகிஸ்தான் மேட்ச் அதுவும் சென்னையில்… எவ்வளவு சுவாரஸ்யமாக காட்சிகளை உருவாக்கி இருக்க வேண்டும்? ஆனால் மிக சாதாரணமாக படமாக்கி இருக்கிறார்கள். நான்கு பேருக்கு இஸ்லாமிய பெயர் கொண்ட டி-சர்ட்டை போட்டு விட்டு இவர்கள் பாகிஸ்தான் வீரர்கள் ‘சொன்னா நம்புங்க’ என்கிறார் டைரக்டர்.

மேட்ச் பிக்சிங் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? இதை செய்யும் வில்லன் எத்தனை கெத்தாக இருக்க வேண்டும்? இதை செய்யும் வில்லன் முருகதாஸ் ஏரியாவில் வட்டிக்கு விட்டு கொண்டு பணத்தை வசூல் செய்ய படாத பாடு படுகிறார். இவர் வில்லனா? இல்லை காமெடியனா என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.

பெரும்பான்மையான லொகேஷன் இரண்டு வீடுகளில் மட்டுமே இருப்பதால் எடிட்டருக்கு எடிட்டிங் செய்வதில் பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஒளிப்பதிவும் இதே ரகம்தான். பின்னணி இசை ஒகே.

மொத்தத்தில், இந்த ‘TEST’ சுயநலத்தோடு இருபவர்களுக்கான TEST




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *