full screen background image
Search
Friday 17 July 2026
  • :
  • :
Latest Update

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்பட விமர்சனம்

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்பட ரேட்டிங்: 2/5

Casting : Senthur Pandian, Preethi Karan, Suresh Mathiazhagan, Poornima Ravi, Tamil Selvi

Directed By : Prasath Ramar

Music By : Pradeep Kumar

Produced By : Poorvaa Productions – Pradeep Kumar

கதை: இளைஞர்களை குறி வைத்து சென்சாரால் A – சான்றிதழ் பெற்று ரிலீஸ் ஆகும் படம் தான் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. மதுரையைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் பி. காம் படிப்பில் தேர்ச்சி பெறாமல், எந்த வேலைக்கும் போகாமல் முகநூல் மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி, தன் வலையில் சிக்கும் பெண்களை நண்பர்களின் செலவில் சினிமாவுக்கு அழைத்துச் சென்று ,தனது காம இச்சைகளை தீர்த்துக் கொள்கிறான். அவன் காதல் வலையில் எதிர்பாரா விதமாக மாயவரத்தைச் சேர்ந்த ப்ரீத்தி கரன் சிக்குகிறார். அவளுக்கு நேரில் வந்து பிறந்தநாள் பரிசு தந்து சர்ப்ரைஸ் தர போவதாக சொல்கிறான் செந்தூர் பாண்டி. அதனை உண்மை என நம்பி பிரீத்திகரனும் நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார். செந்தூர்பாண்டியன் தன்னுடைய நண்பன் சுரேஷ் மதியழகனை அவனுடைய பைக்கில் ,அவனுடைய செலவில் மாயவரத்துக்கு அழைத்துச் செல்கிறான்.

அவளது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறான். ஆனால் அவளது வீட்டில் பாட்டி இருந்ததால் ஏமாற்றம் அடைகிறான் .அவளை வெளியே அழைத்துச் செல்கிறான். அவனுடைய நட்பை உண்மை என நம்பி அவனுடன் செல்கிறாள் ப்ரீத்திகரன். செந்தூர் பாண்டியனின் காம இச்சைக்கு ப்ரீத்தி கரன் பலியானாளா ? இல்லை அவனுக்கு சரியான பாடம் கற்பித்தலா? என்பதுதான் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளை படத்தின் கதை.

செந்தூர்பாண்டியன் :மதுரை தமிழிலும், தன்னுடைய உடல் மொழியாலும், பெண்களிடம் வசியமாக வசனம் பேசி கவர்வதிலும் ,பெண்களை தன்னுடைய காம இச்சைக்கு பயன்படுத்தி கொள்ளும் சுயநலமிக்க மதுரை இளைஞன் கதாபாத்திரத்தில் நிஜ கதாபாத்திரம் போல சிறப்பாக நடித்திருக்கிறார்.
ப்ரீத்தி கரன்: பெண்களை தவறான எண்ணத்தில் அணுகும் ஆண்களையும் தன்னுடைய வார்த்தைகளால் நல்வழிப்படுத்தும் துணிச்சலான மாயவரம் பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவருடைய மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். பெண்கள் நட்பாக பழகினால் ஆண்கள் ஏன் அதை தவறாக புரிந்து கொள்கிறீர்கள் என்று அவர் எழுப்பும் கேள்வி ஒட்டுமொத்த ஆண்களையும் கேட்பதாகவே தோன்றுகிறது.

சுரேஷ் மதியழகன் :செந்தூர் பாண்டியனின் நண்பனாக சிறப்பாக நடித்து நமக்கு இப்படி ஒரு நண்பன் இல்லையே நான் ஏக்கப்பட வைக்கிறார் . அவர் ப்ரீத்தி கரனின் தோழிகளிடம் மாட்டிக் கொண்டு டிக் டாக் வீடியோ பதிவு போடும் காட்சி ரசனை.பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி, ஷிவானி கீர்த்தி தங்களுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பிரதீப் குமார் இந்த படத்துக்கு ரசிக்கும்படி பின்னணி இசை அமைத்து, காட்சிக்கு ஏற்ப பாடல்கள் எழுதி, இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார். ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல் படம் முழுக்க சிறிதும் சினிமா தனம் இல்லாமல் எதார்த்தமாகவே படம் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் நிஜ ஒளியில் படம் பிடித்தது போல் தெரிகிறது. பெரும்பாலும் பயணக் காட்சிகளாகவே இருப்பதால் அதனையும் எதார்த்தமாகவே படம் பிடித்து இருக்கிறார்.

இயக்குனர் பிரசாத் ராமர் இளைஞர்களை திரைக்கு வர அழைக்க திரையரங்க காட்சி அமைத்திருப்பது, சற்று ஓவராக தான் தெரிகிறது. கிளைக் கதைகள் ஏதும் இல்லாததால் ஒவ்வொரு காட்சியின் நீளமும் சற்று அதிகமாக இருப்பதாகவே உணர முடிகிறது. கிளைமாக்ஸ் காட்சி அருமை. ஒவ்வொரு பிள்ளையும் நல்ல பேரை வாங்க பெற்றோர்களின் பங்கு அவசியம் என்பதையும் காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தங்களுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் விதத்தில் இயக்கியிருக்கிறார் இந்த இயக்குனர்.

இந்த 2K kidsன் சேட்டைகளை திரையில் காட்டியிருக்கிறது,மொத்தத்தில் இந்தக்காலத்து ‘துள்ளுவதோ இளமை’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *