full screen background image
Search
Friday 10 July 2026
  • :
  • :
Latest Update

‘லால் சலாம்’ திரைப்பட விமர்சனம்

‘லால் சலாம்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Casting : Rajinikanth, Vishnu Vishal, Vikranth, Anandhika Sanilkumar, Senthil, Thambi Ramaiah, Jeevitha, Moonar Ramesh

Directed By : Aishwarya Rajinikanth

Music By : AR Rahman

Produced By : Lyca Productions – Subaskaran

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் லால் சலாம். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ள மூரார்பாத் என்ற ஊரில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அரசியலுக்காக அவர்களுக்குள் பிளவு ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். அதில் வெற்றியும் அடைகிறார்கள். இதனால் அந்த கிராமம் என்னானது? அதனால் யார் யாருக்கு இழப்பு ஏற்பட்டது? இறுதியில் ஊர் ஒன்று சேர்ந்ததா? என்பதுதான் லால் சலாம்.

இதில் விஷ்ணு விஷால் இந்து இளைஞர்களே கொண்ட கிரிக்கெட் அணியின் வீரராகவும், விக்ராந்த் இஸ்லாமிய இளைஞர்களை கொண்ட கிரிக்கெட் அணியின் வீரராகவும் வருகின்றனர். அதிலும் விக்ராந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரஜினியின் மகனாக நடித்துள்ளார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் பிரச்சனையை ஏற்படுத்தி ஊரைக் கலவரம் ஆக்கி விடுகின்றனர். ஒரு சிலரின் சுயநலத்துக்காக கலவர பூமியாக மாறிய முரார்பாத் அடுத்த அடுத்த பிரச்னைகள் திரைக்கதையாக விரிகிறது.

கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் மூரார்பாத் என்ற ஊரில் நடந்த சில சம்பவங்களை எடுத்துக் கொண்டு அதற்கு புனைவு திரைக்கதை அமைத்து படமாக்கி உள்ளனர். 1993 ஆம் ஆண்டு கதை நடப்பதால், அதற்கு ஏற்றவாறு காட்சிகளை வடிவமைப்பதில் முடிந்த வரை கவனம் செலுத்தியுள்ளனர். வீடு, செல்போன் டவர் இல்லாத பகுதிகள் என பலற்றில் கவனம் செலுத்தியுள்ளனர்.

பிளவுவாத அரசியல், சாதிய ஆதிக்கம் ஆகியவற்றை கதையில் தொட்டிருந்தாலும், இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னை எப்படி பூதாகரமானது என்பதற்கு அழுத்தமான காராணங்களோ, காட்சிகளோ திரைப்படத்தில் தென்படவில்லை. அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்காலாம். முக்கிய விஷயங்களை வசனங்களால் இல்லாமல் காட்சிகளால் சொன்னால் அதன் தாக்கத்தை எளிதில் ரசிகர்களுக்கு கடத்தலாம். ஆனால் பல விஷயங்கள் வசனம் நல்லா இருக்கிறது என்பதற்காக எடுத்ததுபோல் தெரிகிறது.

நடிகர்களை பொருத்தவரையில் தான் எழுதிய கதாபாத்திரத்திற்கு தகுந்த நபர்களை தேர்வு செய்துள்ளனர். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் மிகவும் எதார்த்தமாகவும், இயல்பாகவும் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வந்தாலும், இரண்டு காட்சிகளுடன் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத நல்லிணக்கத்திற்காக அவர் பேசும் வசனங்கள் முக்கியமானவை. காதாநாயகிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒரு பாடலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார் நாயகி.

ஒளிப்பதிவை பொறுத்தவரை கிராமத்தையும், திருவிழாவையும் எதார்த்தம் மீறாமல் படம்பிடிக்க முயற்சித்துள்ளார் ஒளிப்பதிவாளர். ஆனால் படத்திற்கான பின்னணி இசை சுத்தமாக எடுப்படவில்லை. அது பெரும் மைனாஸாக உள்ளது. மதத்தின் பெயரால் சிலர் நம்மை பிரித்தாள நினைத்தாலும், நாம் ஒன்றாக இருந்து அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த லால் சலாம் படத்தை இன்னும் சுவாரஸ்யத்துடன் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *