full screen background image
Search
Tuesday 21 July 2026
  • :
  • :
Latest Update

‘தூக்குதுரை’ திரைப்பட விமர்சனம்

‘தூக்குதுரை’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Yogi Babu, Motta Rajendran, Mahesh, Bala Saravanan, Sendraayan, Marimuthu, Namo Narayanan, Ashwin, Sathya, Seeniyamma, Vinoth Thangaraju, Sinthalapatti Sugi, Raja Vetri Prabhu

Directed By : Dennis Manjunath

Music By : K.S. Manoj

Produced By : Aravind Vellaipandian, Anburasu Ganesan

யோகிபாபு, இனியா, நடித்து டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வந்துள்ள படம் தூக்கு துரை. ஜமீன்தார் பெண்ணான இனியா, ஏழை யோகிபாபுவை காதலிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ஜமீன் யோகிபாபுவை கிணற்றில் வைத்து எரித்து விடுகிறார். இந்த கிணற்றில் ஒரு விலை உயர்ந்த கிரீடம் மாட்டி கொள்கிறது. இதை எடுக்க முயற்சி செய்பவர்களை யோகிபாபு பேயாக வந்து பயமுறுத்துகிறார்.

யோகிபாபுவுடன் சேர்த்து மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், சென்றாயன் இன்னமும் பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் எங்கேயும் நகைச்சுவை இல்லை. எல்லோரும் சீரியசாக எதோ செய்து கொண்டியிருக்கிறார்கள். பல நடிகர்களின் நடிப்பு மேடை நாடக பாணியில் உள்ளது. யோகிபாபுவுடன் நடித்தால் குறைவான அளவில் நடிப்பை வெளி படுத்தினால் போதும் என்று இனியா நினைத்து விட்டார் போலும். அளந்து நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மா அதிகம் கஷ்ட்டப்படாமல் ஒரே இடத்தில் கேமராவை வைத்து எடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வரும் பல வசனங்களை காமெடி என்ற பெயரில் பால சரவணன் அடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன் தனது மொட்டை தலையை வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு நகைச்சுவை செய்ய போகிறாரோ தெரியவில்லை. இன்று தமிழ் சினிமாவிற்கு நல்ல நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு பஞ்சம் உள்ளதை இப்படம் எடுத்துரைக் கிறது. தூக்கு துரை டைட்டிலுக்கும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *