மீண்டும் ஒரு புதிய குழு அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஏமகாதகன் இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு சில நாட்களுக்கு முன்பு பிரசாத் லேபில் நடை பெற்றது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ் வி இ சேகர் தயாரிப்பாளர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டம் ஜீ மியூசிக்கில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது இத்திரைப்படத்தை சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி கண்ணன் பிரைம் ரீல் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார் விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார் கார்த்திக்,மனோஜ் ,ராஷ்மிதா ஹிவாரி , சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
முழுக்க முழுக்க புது முகங்களை கொண்டு மட்டுமே இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது
இத்திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக்களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது
மிகக் குறுகிய காலத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர்
விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரும் படக்குழுவினர் அறிவித்தனர்