full screen background image
Search
Saturday 7 September 2024
  • :
  • :
Latest Update

‘கட்டில்’ திரைப்பட விமர்சனம்

Casting : E.V.Ganesh Babu, Srushti Dange, Geetha Kailasam, Indra Soundar Rajan, Kannika, Mimmo, Kadhal Kandhas, Metti Oli Shanthi, Master Nidhish

Directed By : E.V.Ganesh Babu

Music By : Srikanth Deva

Produced By : E.V.Ganesh Babu

அரண்மனை வீட்டில் 3 தலைமுறை யாக வசிக்கும் கணேஷ் பாபு சூழ்நிலை காரணமாக தாய், மனைவி, மகனுடன் சிறிய வீடு பார்த்து குடியேற்கிறார். அந்த வீட்டில் தாங்கள் பரம்பரையாக பயன்படுத்தும் பெரிய கட்டிலை வைக்க இடமில்லாததால் தனக்கு தெரிந்த ஒருவரின் கடையில் வைக்கிறார். இந்நிலையில் அந்த கட்டில் சர்தார்ஜிக்கு விற்கப்படு கிறது. இதற்கிடையில் கர்ப்பமாக இருக்கும் கணேஷ் பாபு மனைவி சிருஷ்டி குழந்தையை பெற்று விட்டு இறந்து விடுகிறார். அந்த குழந்தையை வேறுவொரு பெண் தூக்கிச் செல்கிறார். காணாமல் போன குழந்தை கிடைத்ததா, விலைபோன கட்டில் மீண்டும் கிடைத்ததா என்ற கேள்விகளுக்கு படம் பதில் அளிக்கிறது.

கட்டில் என்ற டைட்டிலை கேட்ட வுடன் சிலர் வேறு கண்ணோட் டத்தில் இப்படத்தை பார்க்க கூடும் ஆனால் இது முழுக்க ஒரு பாரம் பரிய குடும்பத்தை பற்றிய கதை என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

படத்தை இயக்கி தயாரித்திருப் பதுடன் தாத்தா, தந்தை மகன் என மூன்றுவித கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார் இ.வி. கணேஷ் பாபு. கமர்ஷியல் கலவை இல்லாமல் முற்றிலுமாக குடும்ப படமாக படத்தை கடைசி வரை கொண்டு சென்றிருக்கிறார் .

எதார்த்தமான நடிப்பை வெளிப் படுத்தி இருக்கும் கணேஷ் பாபு மற்ற கதாபாத்திரங்களையும் அளவுடன் கையாண்டிருக்கிறார். மனைவி இறந்து விட்டார் என்று தெரிந்ததும் கணேஷ் பாபு கதறி அழுவது கலங்க வைக்கிறது.

பட்டுப்புடவை.சகிதமாக காரைக்குடி ஆச்சிகளை நினைவு படுத்துகிறார் சிருஷ்டி டாங்கே. பிரசவ வலியால் அவர் துடிக்கும் துடிப்பில் நெஞ்சு படபடக்கிறது. கணேஷ் பாபு, சிருஷ்டி இருவரின் பிள்ளையாக வரும்.மாஸ்டர் நிதிஷ் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தி மனதில் இடம் பிடிக்கிறார்..

கணேஷ் பாபு தாயாக வரும் கீதா கைலாசம் நம் வீட்டில் அன்பு காட்டும் பெரியம்மாவை ஞாபகப்ப டுத்துகிறார். குடிசை பகுதி பெண் ணாக வரும் செம்மலர் சில படங் களில் ஓவர் ஆக்டிங் செய்திருந் தாலும் இப்படத்தில் அடக்கி வாசித் திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கவிப் பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் குடும்ப பாசமும் குடும் பத்தையே கோயிலாகவும் மாறியி ருக்கும் அதிசயம் நடக்க அதற்கு மெல்லிசை .மன்னரைப் போல் மென்மையான இசை ஆடையை நெய்து உடுத்தியிருக்கிறார் ஶ்ரீகாந்த்தேவா .

இயக்குனர் கணேஷ் பாபு படத்தில் பாச இழைகளை அழகாக நெய்தி ருந்தாலும் அதற்கு பட்டை தீட்டும் வேலை செய்வதாக எண்ணி சினிமாத்தனத்தை சேர்க்கை யாக்கி இருப்பதை தவிர்த்திருக்க லாம்

வயவா என்ற தமிழ் புது வார்த்தை யை உலகிற்கு அறியச் செய்திருக் கிறார் மதன் கார்க்கி.

எடிட்டர் லெனின் படத்தின் கதை எழுதி அதை மூன்று தலைமுறை கதையாக மட்டுமல்ல விதார்த்தை யும் சேர்த்து 4 தலை முறை கதை யாக மாற்றி இருப்பதுடன் மரத்தால் செய்த கட்டிலுக்கும் உயிர் உண்டு என்ற உணர்வை தந்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘கட்டில்’ உயிரோட்டம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *