22 வருடங்களுக்கு ஆளவந்தானை மீண்டும் திரையரங்கில் பார்க்கிறேன்.
இந்தக் கால இடைவெளியில் என்னPulp Fiction, Memonto மாதிரியான Nonlinear திரைக்கதைகள் சுவாரஸ்யமான ஒன்றாகிவிட்டன. ‘ஆளவந்தான்’ அது வெளியான காலக்கட்டத்தில் என்ன மாதிரியான பரிசோதனை முயற்சியைக் கொண்டிருந்தது என்பதும் புரிய ஆரம்பித்தது.

இப்போது வெளியாகியிருக்கும் ‘ஆளவந்தான்’ Nonlinear திரைக்கதையை உடைத்துவிட முயன்றிருக்கிறது. நேரடிக் கதை சொல்லல் என்ற முறையில் மறு எடிட்டிங் நடந்திருக்கிறது.
படத்தின் இரண்டாம் பகுதியில் இருந்த பல காட்சிகள் இப்போது முதல் பாதிக்கு இடம் மாறியிருக்கின்றன. அதேபோல நந்து கதாபாத்திரத்தின் உளவியல் சிக்கல்களுக்குள் படம் அதிகம் செல்லவில்லை.
2.45 மணி நேரம் என்றிருந்த படத்தின் நீளம் இப்போது 2 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. படம் தொழில்நுட்ப ரீதியில் தற்போதைய படங்களுக்கு நிகராகவே உள்ளது. முன்பு கிடைக்கத் தவறிய திரை அனுபவம் இப்போது கிடைக்கிறது.
இன்றைய தலைமுறையை இந்தப் படம் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்!
கமல் ஒரு விளங்க முடியா முன்னோடி தான்.
ஆளவந்தான் – ஆச்சரியம்.











