‘தி வில்லேஜ்’ இணையத் தொடர் மூலம் என்னுடைய ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம், நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாகும்’ என பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரை பற்றி நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.
பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் ஒரிஜினல் தமிழ் திகில் தொடரான ‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது. இந்தத் தொடர் அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது. தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. திறமைமிகு நடிகர்களில் ஒருவரான ஆர்யா- பத்தாண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் பணியாற்றி வருகிறார். இப்போது இந்த திகில் தொடரில் நடித்ததன் மூலம் நீண்ட வடிவத்திலான இணையத் தொடரின் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமாகிறார். இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தை கண்டறியும் மீட்பு பணியில் ஈடுபடுவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒரிஜினல் திகில் தொடர் பற்றி நடிகர் ஆர்யா பேசுகையில், ” தி வில்லேஜ் எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. இதன் கருத்தாக்கம், திகில் & த்ரில்லர் அம்சம் மற்றும் ஆழமான கதை ஆகியவை இந்திய ஒ டி டி சந்தையில் ஒரு போதும் அதன் ரசிகர்களால் அனுபவிக்கப்படவில்லை. மேலும் இந்த இணைய தொடர் சுவராசியமானதாக இருப்பதையும் நான் கண்டேன். இது என்னை தொடர்ந்து பணியாற்ற வழி வகுத்தது. இந்திய ஒ டி டி இயங்கு தளங்களில் காணப்படும் அனைத்து திகில் வகையிலிருந்தும் ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடர் தனித்துவமானதாகும். பல தருணங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் திகில்.. ஓர் எல்லைக்குள் பின் தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதை உருவாக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உண்டு. ஆனால் இந்த திகில் தொடரில் இயக்குநர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழி என நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்கள் இந்த வகையான ஜானரிலான படைப்புகளை கண்டு ரசிக்க விரும்புகிறார்கள்.” என்றார்.
‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடரில் ஆர்யாவுடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி என் சன்னி, கே. முத்துக்குமார், எஸ். எஸ். கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, வி. ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் வினோதமான தோற்றமுடைய உயிரினங்கள்… மரபு பிறழ்ந்தவர்கள்.. ஒரு குடும்பத்தை இடைவிடாமல் வேட்டையாடும் பயங்கர கொடூரத்தின் முடிவில்லாத இரவைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சகிப்புத்தன்மையின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஒரிஜினல் தமிழ் திகில் தொடரை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்கிறார். ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த ஒரிஜினல் திகில் தொடர் நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அதனுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலத்தில் சப்- டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
“My OTT debut with The Village has definitely been a different kind of experience.” shares Arya about The Village on Prime Video
Prime Video recently announced the global premiere of their upcoming original Tamil horror series, The Village. Inspired by Asvin Srivatsangam, Vivek Rangachari, and Shamik Dasgupta’s graphic horror novel of the same name, this horror thriller narrates the story of a man, who is on a quest to unravel the mystery behind his family’s disappearance. Arya, one of the most versatile actors of the industry has worked in the industry for over a decade and is now making his long-format streaming debut with this horror series. He plays Gautam; a man on a rescue mission to find his family, along with some locals in the village of Kattiyal.
Speaking about his exciting project, Jamshad Cethirakath, aka Arya, shared, “My OTT debut with The Village has definitely been a different kind of experience. The show’s concept, which is the horror-thriller element with a lot of gore, and a very rooted story was also never experienced in the Indian OTT market. I found that particularly enticing, which led me to pursue it further. The horror series is a class apart from all other horror genres seen on the Indian OTT platforms. A lot of times, the horror that we see in movies too is very restricted and one cannot go beyond a certain point while creating it, but here Milind (Rau – the director) has gone all out. I think this is a way for creators to believe in making this kind of content because people really want to watch these types of genres.”
Along with Arya, The Village features Divya Pillai, Aazhiya, Aadukalam Naren, George Maryan, PN Sunny, Muthukumar K., Kalairaani S.S., John Kokken, Pooja, V Jayaprakash, Arjun Chidambaram, and Thalaivasal Vijay in pivotal roles. It showcases eerie-looking creatures, mutants and an unending night of terror that relentlessly haunts a family, pushing them to the brink of their endurance. This original Tamil horror series is directed by Milind Rau and produced by B.S.Radhakrishnan under the banner of Studio Shakthi Productions. The Village will stream exclusively on Prime Video in Tamil, dubbed in Telugu, Malayalam, Kannada, and Hindi, with subtitles in English from 24 November.