‘எனக்கு எண்டே கிடையாது’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Vikram Ramesh, Swayamsiddha, Shivakumar Raju, Karthik Venkatraman
Directed By : Vikram Ramesh
Music By : Kalacharan
Produced By : Hungry Wolf – Karthik Venkatraman
நாயகன் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார். ஒருநாள் இரவு பாரில் இருந்து ஒரு பெண் அந்த காரில் ஏறுகிறார். இருவரும் பயணம் செய்யும் போது பேசி நண்பர்களாகுகின்றனர். அப்போது அந்த பெண், நாயகனை தன் வீட்டிற்கு மது குடிக்க அழைக்கிறார். நாயகனும் அவரின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு செல்கிறார்.
இருவரும் மது குடித்துக் கொண்டு எல்லாம் முடித்த பின்னர் நாயகி பாத்ரூமை நோக்கி செல்கிறார். அப்போது ஒரு அறையில் பிணம் இருப்பதை கண்டு நாயகன் அதிர்ச்சியடைகிறார். இந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயல்கிறார். ஆனால் வீடு பிங்கர் பிரிண்ட் சென்சாரில் செயல்படுவதால் அவனாள் தப்பிக்க முடியவில்லை.
நாயகன் தப்பிக்க முயற்சிப்பதை அந்த பெண் பார்த்து விடுகிறார். இதனால் இருவருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பெண் மயங்கி விழுகிறார். இது ஒருப்பக்கம் இருக்க நாயகி வீட்டிற்கு ஒரு திருடன் வருகிறான். அவன் சென்சாரை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைகிறான்.
இறுதியில் இந்த வீட்டில் இருக்கும் மர்மம் என்ன?! வீட்டில் இருந்து நாயகன் தப்பித்தாரா? இல்லையா?? என்பதே படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில், ‘எனக்கு எண்டே கிடையாது’ ரசிகர்களை நிச்சயம் கொண்டாட வைக்கும்.



