full screen background image
Search
Saturday 12 October 2024
  • :
  • :

Andava Kaanom PressMeet

ANDAAVA KAANOM , produced by ‘JSK films’ J.Sathish Kumar along with ‘Leo vision ‘ Rajkumar , starring Shriya reddy is directed by debutante Velmadhi. Interestingly Vijay Sethupathi has played an important character in this film. He had given his voice over to the fulcrum of the movie ” Andaa .
Andaava Kaanom’s audio launch took place in Chennai. The music is done by Ashvamithra. This occasion also celebrated JSK films’s 10th year in Tamil cinema industry.

“I have always had the opportunity to work with Sathish Kumar. He is one producer who knows how to take a movie and reach the audience effectively. He also knows the format and procedures of sending a movie to the national award committee and getting the deserving recognition. We followed his words for ‘Dharmadurai’ and got the recognition. Sathish Kumar is someone who wishes good even if i am his rival ” said R K Suresh

“I directed ‘Sivappu enakku vendum’ stressing the need to have a red light area in Chennai. Obviously the censor board didn’t appreciate the content. But it was Sathish Kumar who came out of the way and bought the movie and released it boldly, reason being he always wanted a good movie to reach the people. Only very few producers have such intentions. I want Sathish Kumar to keep producing the kind of movies he does, forever ” said director Eureka .

“Shriya reddy is a Smitha Patel and Shabana Azmi of Tamil cinema industry. Only a gutsy producer like Sathish Kumar can come up with a movie like Andaava kaanom. I think there is an unintentional competition going on between myself and Sathish Kumar as to who introduces more new directors. I must admit he is leading the race ” said director/actor/producer Manobala.

“Sathish sir’s vision and judgement have always hit the bull’s eye. He was the first one to say that “kooda mela kooda vechu” song Will be a super hit. He knows the audience’s pulse and the trade very well ” said director Balakrishnan.

“When I made ‘naduvula konjam pakkatha kanom’ , many distributors watched the movie, recommended to trim the movie and ultimately didn’t like the movie. It was Sathish Kumar who came forward to release the movie. He spread the word that the movie had been trimmed 20 mins but the truth is that we didn’t even trim at all. It reached the audience so well. Only directors will know and understand other director’s struggle and wait to make a movie and release it successfully ” said director Balaji Dharaneedharan.

“Its been 9 years since i acted last in a movie. When director Velmadhi narrated the script to me I asked him if the character is similar to the one I played in ‘Thimuru’. He simply said , “Don’t think about Thimiru, this will be the best movie of your career, please don prepare anything for this role. Just come for the shooting with a open mind ma’am “. Very patiently he taught me the Madurai slang. Without JSK Sathish this movie would not have happened ” said Shriya reddy.

” Without committing any huge hero or doing a big budget film, to sustain successfully in the industry is a huge achievement. It is very common for a director and the producer to have a rift when the movie’s release gets delayed. But I don think any of JSK’s directors including myself have had any such problem with Sathish Kumar. That’s only because of his transparency. For our movie ‘Tharamani’ censor board accept to give U/A certificate after 14 cuts. But it was Sathish Kumar who boldly said it’s ok to get a A certificate but there should not be any cuts . Such is his passion, judgement. It is difficult to come across such a producer. I am sure ‘Andaava Kanom’ will have many interpretations and will be loved by the audience ” said director Ram.

“Director Velmadhi said he is going to train and make around 300 people from a village to act in Andaava kanom. And he did it. When he come and narrated ‘Andaava kaanom’ the only and the first actress that came to my mind was Shriya reddy. If my judgement is right , I think this movie will bag a lot of honors in the coming year’s national awards. We have also decided to release ‘Tharamani’ on August 11th along with our very own thala Ajith sir’s Vivegam ” said producer JSK Sathish kumar.

Directors Selvabharathi, Krishna, Bramma, Lakshmi Ramakrishnan, Karthik Rishi, Ranjith Jeyakodi, actor Venkat subha, Jazz cinemas Kannan, producer Leo vision Rajkumar, albert, actors Ilayaraja, Vinoth, actress Naveena, music director Ashwamithra, lyricish Madhurakavi, director Velmadhi attended the event . All the celebrities and dignitaries were presented a memento by JSK Sathish kumar.

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும் இந்த படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அத்தோடு ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினர்.

என் சினிமா கேரியரில் தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே சதீஷ்குமாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அவர் மாதிரி ஒரு படத்தை கொண்டு சேர்ப்பது என்பது யாராலும் முடியாது. தேசிய விருதுக்கு படங்களை அனுப்பி, அவற்றிற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவது என்பது அவரால் மட்டும் தான் முடியும். அவரை பின்பற்றி தான் தர்மதுரை படத்துக்கு தேசிய விருது பெற்றோம். எதிர் அணியில் நான் இருந்தால் கூட என் நலனுக்காக யோசிப்பவர் தான் சதீஷ்குமார் என்றார் ஆர்கே சுரேஷ்.

சென்னைக்கு சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தை எடுத்தேன். அதை தணிக்கை குழுவில் கூட வரவேற்கவில்லை. அந்த நேரத்தில் மிகவும் தைரியமாக அந்த படத்தை வாங்கி வெளியிட்டார். பணத்துக்காக அந்த படத்தை வெளியிடவில்லை, நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் வெளியிட்டார். நல்ல சினிமா கொடுக்க தமிழ் சினிமாவில் அவர் போல சிலர் தான் இருக்கிறார்கள், அவர் தொடர்ந்து படம் தயாரித்துல் கொண்டே இருக்க வேண்டும் என்றார் இயக்குனர் யுரேகா.

ஸ்ரியா ரெட்டியை தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி என சொல்லலாம். இந்த மாதிரி படங்களை தைரியத்தோடு எடுக்க சதீஷ்குமாரால் தான் முடியும். யார் அதிக இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது என்ற போட்டி அவருக்கும் எனக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் அதில் எனக்கு முன்னால் சென்று கொண்டேயிருக்கிறார் சதிஷ் என்றார் மனோபாலா.

ஜேஎஸ்கே சாரின் கணிப்பு எப்போதும் தவறியதேயில்லை. கூட மேல கூட வச்சி பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகும் என அப்போதே சொன்னார். அது நடந்தது. சினிமா தெரிந்த ஒரு தயாரிப்பாளர் என்றார் இயக்குனர் பாலகிருஷ்ணன்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை நிறைய பேர் பார்த்தார்கள், நிறைய காட்சிகளை கட் செய்ய சொன்னார்கள். யாரும் படத்தை வாங்கவில்லை. படத்தை பார்த்த சதிஷ்குமார் சார் கட் எதுவும் செய்ய தேவையில்லை, அப்படியே ரிலீஸ் செய்யலாம்னு சொன்னார். அதோடு பொய்யாக 20 நிமிடம் கட் செய்து விட்டோம் என சொல்லி தான் படத்தை ரிலீஸ் செய்தார். அது சரியான விதத்தில் மக்களை சென்றடைந்தது. ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பது ஒரு இயக்குனருக்கு எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்பது இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும் என உணர்வுப் பூர்வமாக பேசி விட்டு போனார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம், இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேரா ஷூட்டிங்க்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது என்றார் நாயகி ஸ்ரியா ரெட்டி.

எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டை வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை. அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். ஒரு படத்தை எடுத்து விட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதன் தயாரிப்பாளரோடு முரண் நிச்சயம் இருக்கும். ஆனாலும் ஜேஎஸ்கே சதீஷ்குமாருடன் அந்த முரண் நிச்சயம் எங்களில் யாருக்குமே இருக்காது. என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக சொல்லி நம்மை சமாதானப்படுத்தி விடுவார். தரமணி படத்துக்கு 14 கட் கொடுத்து யு/ஏ சான்றிதழ் கொடுக்க முன் வந்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் கட் வாங்காமல் ஏ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்தார் சதீஷ். அவரை போல ஒரு தயாரிப்பாளரை பார்க்க முடியாது.
அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றா இயக்குனர் ராம்.

இயக்குனர் வேல்மதி ஒரு கிராமத்தில் இருக்கும் 300 பேரை நடிக்க வைத்து எடுக்கப் போகிறேன் என சொன்னார். அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார் இயக்குனர். இந்த மாதிரி ஒரு கதை என்று சொன்னவுடன் முதலில் நாங்கள் நடிக்க கேட்டுப் போனது ஸ்ரியா ரெட்டியை தான். என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு நிச்சயம் தேசிய விருது பட்டியலில் இந்த அண்டாவ காணோம் இடம் பிடிக்கும். இயக்குனர் ராமின் தரமணி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும். தலயோட நாங்களும் கெத்தா வரோம் எனப் பேசினார் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார்.

இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட் சுபா, ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார், ஆல்பர்ட், நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலசிரியர் மதுரகவி, இயக்குனர் வேல்மதி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *