‘ஜவான்’திரைப்பட ரேட்டிங்: 4.5/5
படக்குழு:
நடிகர்கள்: ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியாமணி, தீபிகா படுகோனே, யோகி பாபு மற்றும் பலர்.
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: G.K.விஸ்ணு
எடிட்டிங்: ரூபன்
தயாரிப்பு: Red Chillies Entertainment
இயக்கம்: அட்லி.
தனது முதல் ‘பாலிவுட்’ சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் இயக்குனர் அட்லீ.படம் ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்கிறது, பாலிவுட் ரசிகர்களுக்கு (Goosebumps) இது புதுவித அனுபவமாக இருக்கும் ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பல படங்களில் வந்த காட்சியை நினைவுபடுத்துகின்றன.
படத்தின் துவக்கமே ஹீரோவும், அவரது குழுவும் சேர்ந்து ஒரு ரயிலை கடத்தி, தாங்கள் கேட்கும் ஒரு விஷயத்தை அரசு செய்துகொடுக்க வேண்டுமென்று டிமான்ட் வைக்கின்றனர். இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு சார்பில் களமிறங்கிறார் நாயகி நயன்தாரா, இறுதியாக ஹீரோ ஏன் ரயிலை கடத்தினார்? இதன்மூலம் அவர் சந்திக்கும், ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? கடைசியாக ஹீரோ கேட்டது கிடைத்ததா? என்கிற சுவாரஸ்யமே மீதிக்கதை.
அப்பா விக்ரம் ரத்தோர், மகன் அசாத் ரத்தோர் என இரட்டை வேடத்தில் படம் நெடுக பாலிவுட் பாட்ஷாவின் ஆட்சி தான். எமோஷன், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் ஷாருக் அப்ளாஸை அள்ளுகிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது. காவல் துறையின் தலைமை அதிகாரி நர்மதாவாக நயன்தாரா. ஆக்ஷன் நாயகியாக அவரது எண்ட்ரி காட்சியே அதகளம். படத்தின் முதல் பாதியில் ஷாருக்கானுக்கு இணையாக காட்சிகளும் ஆக்ஷனும் நயன்தாராவுக்கு வைத்திருக்கிறார் அட்லி. ஆனால், இரண்டாம் பாதியில் நயன் மிஸ்ஸிங்.
வெப்பன் பிசினஸ் டீலர் காளீஸாக விஜய் சேதுபதி. உடல்மொழி ராட்சசன் இந்தப் படத்திலும் தன்னுடைய அசால்ட் உடல்மொழியால் கவர்கிறார். பாலிவுட் விஜய்சேதுபதிக்கு நிச்சயம் கம்பளம் விரிக்கும். போற போக்கில் அவர் பேசும் வசனங்கள் பட்டாசு. ஆனால், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக செதுக்க அட்லி கோட்டைவிட்டிருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் தீபிகா படுகோன் கலங்க வைக்கிறார்.
வழக்கமான அட்லி படங்களின் மூலக்கதையாக ஜவானும், ‘மணி ஹெய்ஸ்ட்’, ‘சர்தார்’, ‘முதல்வன்’ என பல படங்களின் கலவையாக இருந்தாலும், பார்வையாளர்களை இழுத்து பிடித்து படம் பார்க்க வைக்க முக்கிய மூன்று காரணங்களாக அமைவது இசை, ஒளிப்பதிவு, ஆக்ஷன். அனிருத்தின் பின்னணி இசை, ஜிகே விஷ்ணுவின் கண்கவரும் ஒளிப்பதிவு, அனல் அரசு, யானிக் பென் உள்ளிட்ட ஆறு பேர் அடங்கிய குழு ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக கையாண்டுள்ளது.
ஷாருக்கானின் முந்தைய படங்களிலும் மதம் சார்ந்து கடுமையான பிரச்சினைகள் கிளம்பியிருக்க, ‘ஜவான்’ படத்தில் விவசாயிகள் கடன், அரசு மருத்துவமனைகளின் தரம், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சு, மக்கள் தங்கள் வாக்குகளை அரசை தேர்ந்தெடுக்க சரியாக பயன்படுத்த வேண்டும் என தேர்தல் நேரத்தில் பாலிவுட்டிலும் ஷாருக்கானை வைத்து சீண்டி இருக்கிறார் அட்லி.
படம் துவக்கத்தில் இருந்தே எமோஷன் காட்சிகள், பிளாஷ்பேக் காட்சிகள் என நீண்டு கொண்டே செல்வது அயர்சி. அதுவும் முதலில் மெட்ரோ ஹைஜாக் நடக்கும் போது ஷாருக்கானின் எமோஷன், நயன் – ஷாருக் காதல் காட்சிகள் எல்லாம் சுத்தமாக எடுபடவேயில்லை. படத்தில் உயரதிகாரியாக வரும் நயன்தாரா, ஷாருக் பின்னணி குறித்து எதுவும் பெரிதாக தெரிந்து கொள்ளாமலேயே திருமணம் வரை செல்வதும், பின்பு அவருடைய பிளாஷ்பேக் தெரிந்து அவர் பக்கம் சாய்வது, சிறையில் இருக்கும் பெண்களுக்கான ஆயுதம், அவர்களை வைத்து அசாத் பல ஆபரேஷன் நடத்துவது என இப்படி பல விஷயங்கள் அபத்தமாகவும் மேலோட்டமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
படம் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு காட்சியும் இப்படித் தான் நகரும் என கிளைமாக்ஸ் வரை மிக எளிதாக கணித்து விட முடிவது பலவீனம். அப்படியான கதையின் நீளத்தை கத்திரி போட பல இடங்களில் எடிட்டர் மறந்திருக்கிறார்.இத்திரைப்படத்திற்கு ‘ஷாருக்கான்’ ஹீரோ என்றால் திரைப்பட பின்னணியில் இசையமைப்பாளர் ‘அட்லியும்’ ஒரு ஹீரோதான் அந்த அளவிற்கு Backgroud மியூசிக்கில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படம் கட்டாயம் ஷாருக்கானின் டாப் 5 ஃபேவரெட் படங்களில் ஒன்றாக இடம் பிடிக்கும் என்று கூறப்படுக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூலிக்கும் என்று கூறப்படுக்கிறது.மொத்தத்தில் ஜவான் திரைப்படம் ‘பிளாக்பஸ்டர் ஹிட்’.