full screen background image
Search
Monday 24 March 2025
  • :
  • :

WEB திரைப்பட விமர்சனம்

WEB திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Natty, Shilpa Manjunath, Motta Rajendran, Murali, Ananya Mani, Shaasvi Bala, Subhapriya Malar

Directed By : Haroon

Music By : Karthick Raja

Produced By : Velan Productions – VM. Munivelan

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூன்று பேரும் பல்வேறு போதை பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.மது அருந்திவிட்டு வேகமாக வாகனத்தை இயக்கி, விபத்தை ஏற்படுத்துபவர்களின் விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தான் “Web”

கதையின் நாயகிகளான “ஷில்பா மஞ்சுநாத்”, “அனன்யா மணி”,”சாஸ்வி பாலா” ஆகியோர் IT துறையில் பணியாற்றுகிறார்கள்.

வார இறுதி விடுமுறை நாட்களில் விருந்துகளுக்கு சென்று மது, போதை பொருட்களை பாவித்து வாழ்க்கையை உற்சாகமாக கழித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தங்களது தோழியின் திருமண நிகழ்வை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்றினை ஒருங்கிணைத்து அதில் மது மற்றும் போதை பொருள்களை பாவித்து வாகனத்தை இயக்குகிறார்கள்.

இரவு நேரத்தில் போதையில் காரை வேகமாக ஓட்டிச் செல்கிறார்கள். காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது நட்டி என்கிற நட்ராஜின் கட்டுப்பாட்டில் ஒரு பாழடைந்த வீட்டில் கைகள் கட்டப்பட்டு படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

நட்டி நட்ராஜ் மற்றும் அவரது பெண் உதவியாளர் இருவரும் இந்த நான்கு பெண்களுக்கும் வேளை தவறாமல் உணவளித்து, போதை மருந்தை செலுத்தி தூங்க வைத்து தொல்லை கொடுக்கிறார்கள். அந்த வீட்டில் மற்றொரு பெண்ணையும் கட்டி வைத்து அடித்து துன்புறுத்துகிறார்கள்.

படத்தின் முதல் பாதி முழுவதும் பாழடைந்த வீட்டில் நடைபெறுவதால் திரைக்கதையில் எந்த சுவாரசியமான திருப்பமும் இன்றி செல்கிறது.

இரண்டாம் பாதியில் ஏதேனும் சுவாரசியம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதிலும் இயக்குநர் ஏமாற்றத்தை தருகிறார். உச்சகட்ட கட்சியில் எதிர்பாராத திருப்பம் என எண்ணி இயக்குநர் வைத்திருக்கும் விடயம் புதிது என்றாலும் சுவராசியமாக சொல்லப்படாததால் தொய்வைத்தான் தருகிறது.

நட்டி என்கிற நடராஜ் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சற்றே ஆசுவாசமான நடிப்பை வழங்குகிறார். நடிகைகளின் ஷில்பா மஞ்சுநாத்தை கடந்து ஷாஸ்வி பாலாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *