‘கொலை’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த் சங்கர்
இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன் இயக்கம் : பாலாஜி குமார்
தயாரிப்பு : இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ்.
தமிழ் இயக்குனர் ஹாலிவுட் தரத்தில் ஒரு கிரைம் தில்லர் படத்தை கொடுத்துள்ளார், கதையில் பிரபல மாடல் அழகியான ‘லைலா’ அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டுகிறார். பூட்டிக் கிடந்த வீட்டில் எப்படி லைலா மரணம் அடைந்தார் என்பதை விசாரிக்க உயர் அதிகாரியாக ‘ரித்திகா சிங்’ வருகிறார். விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததனால் அவருக்கு பயிற்சி அளித்த துப்பறிவாளரான விஜய் ஆண்டனி உதவியை நாடுகிறார் பின்பு துப்பு கிடைத்ததா கொலையாளியை கண்டுபிடித்தார்களா என்பதை சஸ்பென்ஸ் திரில்லரில் பயணிக்கிறது கதை.
கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி உள்ள இப்படம் உலகளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.
துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் ‘விஜய் ஆண்டனி’ நரைத்த முடியுடன் அதிக அலட்டல் இல்லாமல் கச்சிதமாக பொருத்துகிறார். லைலாவின் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் காட்சிகள் அருமை குறிப்பாக எமர்ஜென்சி கதவைத் திறந்தவுடன் அலாரம் ஒலிக்கும்.. அதை நிப்பாட்ட கொலைகாரன் எப்படி எல்லாம் கையாண்டிருப்பான் என்று துப்பறிவாளனாக யோசிக்கும் காட்சியை சுவாரஸ்யமாக செல்கிறது. லைலாவின் காதலர், மாடலிங் ஏஜெண்ட், புகைப்படக் கலஞைர் உள்ளிட்டோரை விசாரிக்கிறார்கள். விசாரணையில் லைலாவின் வித்தியாசமான வாழ்க்கை குறித்து மட்டும் தெரிய வரவில்லை, கொலையாளியையும் நெருங்குகிறார்கள்.
இதனிடையே வரும் கதாபாத்திரங்கள் தங்கள் பங்களிப்பை அற்புதமாக கொடுத்துள்ளார்கள்..ராதிகா மற்றும் மாடல் அழகி மீனாட்சி சௌத்ரி..ஜான்விஜய்..அர்ஜுன் சிதம்பரம் சித்தார்த் சங்கர் இவர்கள் மூலம் இயக்குனர் கொலை (திரைக்)கதையை அழகாக நகர்த்தி உள்ளார். ஒரு கொலை அதை கண்டு பிடிக்கும் கதை என்று வருபவர்களுக்கு கிரைம் திரில்லர் படத்தில் அழகான விஷூவல் ட்ரீட் கொடுத்துள்ளனர் பட குழுவினர்… நல்ல விஷுவல்ஸுடன் கூடிய கொலை த்ரில்லர் படம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற படம் கொலை. விசாரணை உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் எழுத்தும், நிகழ்வுகளும் நம்மை வியக்க வைக்கவில்லை. கொலை செய்யப்பட்ட லைலாவுக்காக பரிதாபப்பட வைக்கவில்லை படம்.ஹாலிவுட் தரத்தில் திரைப்படத்தை எடுத்து இருக்கும் இயக்குனர் அதை பிசி சென்டர் நபர்களும் ஈசியாக புரிந்து கொள்ளும்படி காட்சிகள் அமைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
மொத்தத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக தமிழில் வந்திருக்கிறது ‘கொலை’ திரைப்படம்.