ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி! ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வைரல்!
ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ‘ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆண்டனியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாப்பனுக்குப் பிறகு, இயக்குனர் ஜோஷியின் புதிய படமான ‘ஆண்டனி’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரமாண்ட மாஸ் கெட்-அப்பில் வரும் ஜோஜு ஜார்ஜ் கைதட்டல்களை பெற்று வருகிறார். இந்த படத்திற்காக ஜோஜு ஜார்ஜ் உடல் எடையை மிகவும் குறைத்து உள்ளார். இது மலையாள திரைஉலகில் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜோஷியின் மற்றொரு சூப்பர்ஹிட் படமான பொரிஞ்சு மரியம் ஜோஸ் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ் விஜயராகவன் ஆகியோர் ஆண்டனி படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பு. பொரிஞ்சு மரியம் ஜோஸை விட ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் இன்னொரு சிறப்பு என்னவெனில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜோஷி கூட்டணி இணைந்து பணியாற்றிய பொரிஞ்சு மரியம் ஜோஸ் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்து இருந்தார். பொரிஞ்சு மரியம் ஜோஸ் பெரிய வெற்றிக்குப் பிறகு ஜோஜுவும் ஜோஷியும் இணையும் போது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. லாட்டா படத்திற்கு பிறகு ஜோஜு நடிக்கும் படம் ஆண்டனி.
இப்படத்தை ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் சார்பில் ஐன்ஸ்டீன் சேக் பால் தயாரித்துள்ளார். எழுத்து – ராஜேஷ் வர்மா, ஒளிப்பதிவு – ராணா டைவ், எடிட்டிங் – ஷியாம் சசிதரன், இசை இயக்கம் – ஜேக்ஸ் பிஜோய், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – தீபக் பரமேஸ்வரன், கலை இயக்கம் – திலீப் நாத், ஆடை வடிவமைப்பு – பிரவீன் வர்மா, ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர், ஸ்டில்ஸ் – அனூப் பி சாக்கோ. முதன்மை இணை இயக்குனர் – சிபி ஜோஸ் சாலிசேரி, அதிரடி இயக்குனர் – ராஜசேகர், ஆடியோகிராபி – விஷ்ணு கோவிந்த், நிர்வாக தயாரிப்பாளர் – வர்கி ஜார்ஜ், இணை தயாரிப்பாளர்கள் – ஷிஜோ ஜோசப், கோகுல் வர்மா, கிருஷ்ணராஜ் ராஜன், சந்தைப்படுத்தல் திட்டமிடல் – அப்ஸ்குரா என்டர்டெயின்மென்ட், விநியோகம் – அப்பு பாத்து பப்பு தயாரிப்பு .