full screen background image
Search
Monday 24 March 2025
  • :
  • :

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்பட விமர்சனம்

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Arya, Siddhi Idnani, Viji Chandrasekar, Madhusudhan Rao, Thamizh, Naren, Singampuli

Directed By : Muthaiah

Music By : GV Prakash Kumar

Produced By : Vedikkaranpatti S. Sakthivel

ஆர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கிறது?

ஒரு கிராமத்தில் ஒரு தைரியமான பெண்ணாக வரும் தமிழ் (சித்தி இத்னானி) தனது 100 ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களுக்கு ஆசைப்படும் மாமாவுக்கு எதிராக போராடுகிறார். அவர்கள் அவளை தங்கள் மகன்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும்போது, தமிழ் காதர் பாஷாவின் உதவியை நாடுகிறது, அவர் ஏன் காதர் பாஷாவை தேடி செல்கிறார்? அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு உண்மையில் ஆர்யா யார்? என இந்த சிக்கலான உறவுகளுக்கு இருக்கும் பாசத்தை முத்தையா தனது பாணியில் கட்டவிழ்க்கிறார்.

முத்தையா செய்ய வேண்டியது எல்லாம் படத்தில் ஒரு கேரக்டரை முழுக் கதையையும் விவரிக்க வேண்டும். அப்போதான் நாயகன் எதிரிகளை அடித்து தும்சம் செய்வதில் பிஸியாக இருக்க முடியும். அந்த வேலையை சரியாக செய்திருக்கிறார். படத்தில் ஆறு முதல் ஏழு சண்டைகள் உள்ளன. ஒவ்வொரு ஆக்‌ஷன் சீக்வென்ஸும் ஆர்யாவை அரிவாளுடன் பின்தொடர்ந்து குத்துவது வெட்டுவது என நகர்கிறது.

வில்லன்கள் அனைவரும் அரிவாலும் கத்தியுமாக சுற்றி வருகிறார். ஒரு மாற்றமாக, முக்கிய வில்லன் மட்டும் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் செல்கிறார். அவர் திரையில் தோன்றும் போதெல்லாம், அவர் வெடிகுண்டுகளை ஒரு பையன் அல்லது வெறும் நிலத்தில் வீசுகிறார். அந்த வெடிகுண்டு மட்டும் தான் முந்தையாவின் முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் இருக்கும் ஒரே கிரியேட்டிவ் ஐடியா.

காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் (ஆர்யா) ஒரு குழப்பமான வாழக்கையை கொண்டவர் ஒரு இந்து தம்பதியினருக்கு பிறந்து ஒரு முஸ்லிமான அவரது மாமா காதர் (பிரபு) என்பவரால் வளர்க்கப்பட்டார். இந்துக்களுடன் இணக்கமாக வாழும் முஸ்லீம் சமூகத்தின் மரியாதைக்குரிய தலைவரை மதிக்காதவர்களின் கை, கால்களை உடைப்பதில் தனது நேரத்தை செலவிடுகிறார். காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்

சண்டை காட்சிகளில் அதகளம் செய்த ஆர்யா (காதர் பாஷா) நடிப்பில் கோட்டை விட்டுள்ளார். காதர்பாஷா என்ற கேரக்டருக்கும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறார். முறுக்கு மீசை, அன்டர்வேர் தெரிய லுங்கி அல்லது வேட்டி என அசல் முத்தையா படங்களின் நாயகயாக ஆர்யா வலம் வந்தாலும் இந்த கதைகளத்தின் நாயகனான அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முத்தையாவின் முந்தைய படங்களில் பெண் கேரக்டர்களுக்கு வலுவாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் வலுவாக தொடங்கி வலுவிழந்து நிற்கிது தமிழ்ச்செல்வி கேரக்டர்.

படத்தில் ஜமாத் தலைவராக வரும் பிரபு, ஆடுகளம், நரேன் உள்ளிட்ட நடிகர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். கேஜிஎப் படத்தின் வில்லன் அவினாஷ் டானாக்கரன் இயக்குனர் தமிழ் என வில்லன்கள் படை அதிகமாக இருந்தாலும் கதையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பழமையான கதை மற்றும் திரைக்கதையுடன் உள்ள இந்த படத்தில் பிற்போக்குதனமாக காட்சிகள் உள்ளன.

ஆனால் மறுபுறம் பெண் சிசுக்கொலை, மத நல்லிணக்கம், பெண் கல்வி, அன்றாட பாலினத்தை இயல்பாக்கும் பிரச்னை, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் கை வைத்துள்ளார். இது போன்ற அவரது முற்போக்கு எண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முத்தையா தனது படங்களில், எல்லா வழிகளிலும் செல்வது அவரது கதாநாயகர்களை சுயநலமற்றவர்கள் தங்களை நம்பி வந்தவர்களுக்காக எதையும் செய்யும் கொலைகாரர்கள் என்ற முத்திரை இந்த படத்திலும் தொடர்கிறது. ஆனால் இன்னும் எத்தனை படத்திற்கு இது தொடரும் என்று நமக்கே சளிப்பு தட்டுகிறது. அதேபோல் முத்தையாவின் முந்தைய படங்களில் இருந்த ரசனையான திரைக்கதை மற்றும் சில புதுமையான யோசனைகள் இந்த படத்தில் இல்லை.

உதாரணமாக, கார்த்தியின் விருமன் படத்தில் ஒரு மகன் தனது அப்பாவைக் கொல்ல நினைக்கிறான் ஏன் என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான முன் கதை இருந்தது. இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. ஆனால் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் அப்படி எந்த சுவாரஸ்யமும் இல்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *