‘தெய்வ மச்சான்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், நேஹா ஜிஹா, பாலா சரவணன், அனிதா சம்பத் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம், தெய்வமச்சான்.
மெடி ப்ளஸ் குடும்ப ட்ராமாவாக தயாராகி இருக்கும் இந்த படத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் விமலின் தங்கையாக நடித்துள்ளார்.
பாந்தமான நடிப்பு. முதலிரவில் கதவைத் தட்டும் அண்ணனிடம் எரிச்சல் காட்டும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். விமலுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை நேகா. சில காட்சிகளில் வந்து போகிறார்.
விமலின் அப்பாவாக பாண்டியராஜன், வில்லனாக ‘ஆடுகளம்’ நரேன் பேயாக வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு, இசை ஆகியவை குறித்து தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.
அண்ணன் – தங்கை பாசம், ஜாலியான கதை என ஃபேமலி ட்ராமாவாக உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால் நம்ப முடியாத கதை, சிரிக்க வைக்காத நகைச்சுவை காட்சிகள் என படத்துடன் ஒன்ற முடியவில்லை.
ஆனாலும் ரத்தம் சொட்டும் சண்டைக்காட்சிகள், முகம் சுழிக்கவைக்கும் ஆபாச காட்சிகள் இல்லாம் குடும்பத்துடன் பார்க்க ஒரு படம் வெளியாகி இருக்கிறது என்பது மகிழ்ச்சிதானே!