full screen background image
Search
Friday 18 April 2025
  • :
  • :
Latest Update

பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு

பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு

ஏஆர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 2021 ஆம¢ஆண்டு செப்டம்பர் 17யில் திரையரங்குகளில் வெளியாகிய பிறர்தரவாரா திரைப்படம் பார்த்த ரசிகர்களிடம் நல்ல வரவேற்றைப் பெற்றது. ஏ.ஆர்.காமராஜ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பிறர் தர வாரா திரைப்படம் ஏப்ரல் 14, 2023 தமிழ் புத்தாண்டு முதல் மூவி வுட் (Movie Wood)) ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். டேவிட் & கோகுல் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஹரிபிரசாத் படத்தொகுப்பில், ஜாக் வாரியர் இசையில் படம் நல்ல வரவேற்றை பெற்றது.

க்ரைம் த்ரில்லர் படமான பிரற்தர வாரா குறித்து நல்ல விமர்சனங்களை ஊடகங்களில் வெளிவந்தன. பார்த்தவர்களில் பாராட்டைப் பெற்றதால் மக்களிடம் ஒடிடி வழியாக தற்போது கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். சிட்டிக்குள் நடக்கும் குழந்தை கடத்தலையும் அதன் பின்னால் இருக்கும் குற்றவாளிகளையும் எப்படி கண்டுபிடிக்கிறார் போலீஸ் அதிகாரி காமராஜ் என்பதை சஸ்பென்ஸ்சோடு படமாக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்கள் அனைத்தும் குறிப்பிடும்படியாக உள்ளது. இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்ப்பதற்கு விறுவிறுப்போடு அடுத்து என்ன அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைப்பதோடு செண்டிமென்ட், வசனம் என்ற அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது. இந்த படம் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட க்ரைம் திரில்லர் படம்.

– PRO விஜய் (எ) முருகன்
99402 59469




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *