full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

SP Cinemas acquires the entire Theatrical & Non-Theatrical rights of Vikram Prabhu- Daali Dhananjaya-Vani Bhojan starrer “Paayum Oli Nee Yenakku”

விக்ரம் பிரபு-டாலி தனஞ்சயா-வாணி போஜன் நடித்த “பாயும் ஒளி நீ எனக்கு ” படத்தின் முழு திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் SP சினிமாஸ் பெற்றுள்ளது.

SP சினிமாஸ் தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் SP சினிமாஸ். அந்த வகையில் தான் விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “பாயும் ஒளி நீ எனக்கு ” திரைப்படத்தை SP சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, இயக்குனர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார். கார்த்திக் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார், மேலும் அவரது அடுத்த படம் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.சிவராஜ் குமாருடன் அமையவிருக்கிறது. சிவராஜ் குமார், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பிரமாதமாக வழங்கப்பட்ட இந்த படத்தின் ஆக்‌ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை , படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.

கன்னட திரைதுறையின் மிகவும் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன . வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்குத் துறையில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார் . “பாயும் ஒளி நீ எனக்கு ” திரைப்படம் தமிழ்த் துறையில் அவரது இசை அறிமுகத்தைக் குறிக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். பி.எல். சுபேந்தர் (கலை இயக்குனர்), தினேஷ் காசி (ஸ்டன்ட் இயக்குனர்), மற்றும் ராஜகிருஷ்ணன் – 4 Frames (ஒலி கலவை), சதீஷ் – AIM (PRO) ஆகியோர் படத்தின் மற்ற முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகின்றனர்.

SP சினிமாஸ் நிறுவனம் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் SP சினிமாஸ், K13 (அருள்நிதி), மாறா (மாதவன்), ஓ மனபெண்ணே (ஹரிஷ் கல்யாண்) போன்ற தனித்துவமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. . SP சினிமாஸ் சிறந்த உள்ளடக்கம் கொண்ட பல வெற்றி படங்களை விநியோகித்துள்ளது, அதில் அசோக் செல்வன் நடித்த வேழம் மற்றும் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ‘பாரம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

SP Cinemas acquires the entire Theatrical & Non-Theatrical rights of Vikram Prabhu- Daali Dhananjaya-Vani Bhojan starrer “Paayum Oli Nee Yenakku”

SP Cinemas has been a pioneer in the Tamil movie industry for producing films with unique and entertaining contents. The production house, which is inclined to the absolute commitment of producing and releasing good quality films, has cherry-picked Vikram Prabhu’s upcoming film “Paayum Oli Nee Yenakku” and will release it all over India and Worldwide. The movie will released in Tamil,Kannada & Telugu.

Karthik Adwait in his Tamil Debut, has written, directed, and produced this film for his production house Karthik Movie House.Karthik Adwait is an alumini of New York Film Academy. Post his degree, Karthik worked under acclaimed senior Editor Kotagiri Venkateswara Rao garu, who is known for his association with Director Rajamouli garu. Karthik has directed many ad films and his next film with Kannada Superstar Dr.Shivaraj Kumar who is currently playing a key role in Super Star Rajinikanth starrer JAILER , has been announced and shooting begins mid of 2023.

The brilliantly presented action teaser has already heightened the expectations of the film for its sleek visuals and cuts, scintillating music, and outstanding screen presence of Vikram Prabhu.

Kannada Industry’s most celebrated actor Daali Dhananjaya plays the main antagonist in this film and his action scenes will elevate the film to another dimension. Vani Bhojan plays the female lead character and the others in the star cast include Anand,Vivek Prasanna, Vela Ramamoorthy among others who perform pivotal characters in this movie.

Sagar Mahati, son of reputed music director Mani Sharma has scored the music for this film. He has already delivered successful hits in the Telugu industry and Paayum Oli Nee Yenakku marks his musical debut in the Tamil industry. ‘Pariyerum Perumal’ fame Cinematographer Sridhar is cranking the camera and C.S. Prem Kumar is taking care of editing. P.L. Subendhar (Art Director), Dinesh Kasi (Stunt choreographer), and Rajakrishnan – 4 Frames (Sound Mixing), Sathish – AIM (PRO) are the other key technicians in the film.

SP Cinemas is currently producing Harish Kalyan starrer DIESEL and has produced films based on unique genres and themes like K13 (Arulnithi), Maara (Madhavan), Oh Manapenne (Harish Kalyan) to name a few which have won acclaimed responses from both critics and the audience. SP Cinemas has distributed several content-driven successful movies and Ashok Selvan starrer Vezham and National award-winning Tamil movie ‘Baaram’ are notable among them.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *