‘துணிவு’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
அஜித் – ஹெச். வினோத் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு வெளியாகும் மூன்றாவது திரைப்படம் துணிவு ஆகும்.ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வரியார், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரண்டு படங்களில் யாருக்கு வெற்றி என போட்டிகள் நிகழ்கிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் பற்றி பார்க்கலாம்.
இந்த படத்தில் அஜித் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வங்கி அரசுக்கு தெரியாமல் மிகப்பெரிய தொகையை மறைத்து விடுகிறது. நடிகர் வீராவின் குரூப் ஒரு வங்கியை கொள்ளையடிக்க செல்கிறது. ஆனால் ஏற்கனவே அந்த வங்கியை அஜித் குரூப் கொள்ளை அடித்திருப்பார்கள்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு குறையாமல் தோட்டாக்களின் மத்தியில் நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு வங்கியில் அஜித் ஏன் கொள்ளை அடித்தார் என்ற காரணத்தை கூறியுள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி படத்தில் நிறைய சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு கொடுத்திருப்பார் இயக்குனர். விறுவிறுப்பாக நகர்கிறது கதைக்களம்.
வங்கியில் நடக்கும் மோசடிகளை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடித்துள்ளார் அஜித்.
படத்தின் இடைவெளிக்குப் பிறகு ஏன் இந்த கொள்ளை சம்பவத்தில் அஜித் ஈடுபடுகிறார் என்பதை படத்தின் கிளைமாக்ஸ் உடன் முடித்திருக்கிறார் இயக்குனர் ஹெச். வினோத்.
வாரிசுடன் ஒப்பிடும் போது படத்தின் நீளம் குறைவுதான் என்றாலும் மின்னல் வேகத்தில் முதல் பாதி முடிந்து விடுகிறது.எடிட்டிங் விஜய் வேலு குட்டி. கமிஷனராக சமுத்திரக்கனி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு கட்சிதமாக பொருந்தியுள்ளது.
வங்கியில் நடக்கும் மோசடிகளால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எப்படி பாதிப்படைகின்றன என்பதை இரண்டாம் பாதியில் கூறியுள்ளார் இயக்குனர்.
வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. மேலும் பல விமர்சனம் எழுந்து வந்தது. அதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக துணிவு திரைப்படத்தில் மாஸ் காட்டியுள்ளார் அஜித். தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.