full screen background image
Search
Friday 28 March 2025
  • :
  • :
Latest Update

Full Video: Dream House Production No 1 Movie Pooja | Sonia Agarwal | KSK

Dream House நிறுவனம் தயாரிப்பில்,  மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம், இனிதே துவங்கியது !

Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.

நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.

நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு  சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. ஹாரர் படக்காதலர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் இருக்கும். படத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு

எழுத்து,  இயக்கம் & தயாரிப்பு – N ஹாரூன்
இசை: K M ரயான்
ஒளிப்பதிவு : விஜயகுமார் கிருஷ்ணா
எடிட்டர் : பிஜு .வ. டான் போஸ்கோ
ஸ்டண்ட்: ஃபயர் கார்த்திக்
கலை இயக்கம் : டான் பாலா
நடன இயக்குனர்: ரிச்சர்ட்
ஆடை வடிவமைப்பாளர்: A புஜ்ஜி
ஸ்டைலிஸ்ட் : பூர்ணிமா
மேக்கப் : மாரியப்பன்
பாடலாசிரியர்: விவேகா & குட்டி ரேவதி
மேனேஜர் : ஜெகதீஷ் K H
ஸ்டில்ஸ்: மிலன் சீனு
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
நிர்வாக தயாரிப்பாளர்: KSK செல்வா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *