‘ப்ரோல்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
பரோல் என்ற வார்த்தைக்குப் பின்னால் நிறைய வலிகளும் கதைகளும் உண்டு. அதை உற்று நோக்கிப் பற்றிப்படர்ந்தால் நிறைய நல்ல சினிமாக்களை உருவாக்க முடியும். அப்படியொரு சினிமாவை உருவாக்க முயற்சித்துள்ளது பரோல் டீம்
இயக்குநர் துவாரக் ராஜா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை வடசென்னையைச் சேர்ந்த ஒரு தாய் இரு மகன்களை மையப்படுத்திய கதை.
ஜானகி சுரேஷுக்கு லிங்கா, ஆர்.எஸ் கார்த்திக் என இரு மகன்கள். இளையமகன் ஆர்.எஸ் கார்த்திக் ப்ளம்பர் வேலை செய்பவர். மூத்த மகன் லிங்கா கொலைகள் செய்யும் கூலி. மூத்த மகன் கொலைகளே செய்தாலும் அவர் மேல் மட்டும் ஜானகி சுரேஷுக்குப் பாசம் அதிகம். இதனால் ஆர்.எஸ் கார்த்திக் அண்ணன் மேல் பொறாமையும் அம்மா மேல் கோபமுமாக இருக்கிறார். அந்த பொறாமை மற்றும் கோபத்தின் விளைவுகள் எப்படியான முடிவுகளைக் கொடுக்கிறது என்பதே படத்தின் கதை. கொலைகார அண்ணனையும், தன் அம்மாவையும் உணர்ந்து ஆர்.எஸ் கார்த்திக் அண்ணனுக்கு ப்ரோல் வாங்கும் போராட்டங்கள் தான் திரைக்கதை
நாயகன் லிங்கா ஆர்.எஸ் கார்த்திக் அண்ணன் தம்பியாக இருவரும் வடசென்னை இளைஞர்களை கண்முன் நிறுத்துகிறார்கள்..ஜானகி சுரேஷ் அம்மா கேரக்டரைச் சரியாக உள் வாங்கியிருக்கிறார். வக்கீலாக வரும் வினோதனி நல்ல தேர்வு
படத்தில் கொட்டப்பட்டுள்ள உணர்வுகளை தன் பின்னணி இசையால் சரியாக கோர்த்திருக்கிறார் இசை அமைப்பாளர். வட சென்னையின் நிஜ முகம் உடல் போன்றவற்றை தன் கேமராக்கண்களால் சரியாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்
அம்மாவின் தியாகமும் அர்ப்பணிப்பும் எப்படியான கல் நெஞ்சையும் கரைக்கும் என்ற முடிவும், வன்முறைக்கான தீர்வு அன்பில் தான் இருக்கிறது என்ற மெசேஜும் பரோலை ரசிக்க வைக்கிறது
3/5