full screen background image
Search
Monday 24 March 2025
  • :
  • :

Vendhu Thanindhathu Kaadu 50th Day Celebration

வெந்து தணிந்தது காடு” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா !!!

Full Video: Vendhu Thanindhathu Kaadu 50th Day Celebration | STR | Udhayanidhi


#venthuthaninthathukaadu50thdaycelebration #vtk50thdaycelebration #focusnewz #focusnews #kollywoodmix #cinema #news

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவினில்

நடிகர் சரத்குமார் கூறியதாவது..,
இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ ஆர் ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நடிகை ராதிகா கூறியதாவது..,
இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது. சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும், எனது வாழ்த்துகள்.

கே எஸ் ரவிக்குமார் கூறியதாவது..,
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர். அவர்களது கடின உழைப்பில் இந்த படம் சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது..,
இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…,
வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததற்கு இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள் தான் காரணம், அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தை முதலில் நான் தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக்கொண்டதால் நான் இந்த படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின் படி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வெந்து தணிந்தது காடு பாகம் இரண்டிற்காக நான் ஆவலாக இருக்கிறேன்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாவது…,
இந்த படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிப்பதற்காக தான் இந்த விழா. ரெட் ஜெயண்ட் இந்த படத்தை வாங்கியவுடன் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்பு தான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

நடிகர் சிலம்பரசன் கூறியதாவது..,
இந்த படத்திற்கு ஒரு சிறப்பாக வெளியீட்டை கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. ஏ ஆர் ரகுமான் சார் உடைய இசைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றுவது போல் இருக்கிறது. இந்த படம் ரத்தமும் சதையும் கலந்த ராவான படமாக அமைந்தது. அதை வரவேற்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *