இசையமைப்பாளர் டி இமானிடம் பாராட்டை பெற்ற செந்தில் குமரன்
தமிழர்கள் பெரும்பாலானோர் உலகம் முழுவதும் சென்று வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்தாலும் தமிழர்கள் என்ற உணர்வோடு பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள்.
அப்படி தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்றவர் தான் செந்தில் குமரன். நியூயார்க் யூனிவர்சிட்டியில் பி.ஏ. படித்த இவர், தற்போது கனடாவில் மார்கெட்டிங் பிசினஸ் செய்து வருகிறார்.
தமிழ் மொழி மீதும், பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட செந்தில் குமரன், 2003ம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 2004, 2005, 2006, 2007, 2015 மற்றும் 2017ல் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஸ்ரீநிவாஸ், லக்ஷ்மன் ஸ்ருதி, திப்பு, மாதங்கி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விஜய் ஆதிராஜ், ஹரிணி, உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர் 2016ம் ஆண்டு மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். அதில் இசையமைப்பாளர் இமான் இசையில் சூப்பர் ஹிட்டான ‘கூடைமேல…’ பாடலை, மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். இந்த பாடல் யூடியூப்பில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பாடலை இசையமைப்பாளர் டி இமான் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.
கடந்த 2 வருடங்களில் ‘சந்தோஷம்’, ‘முதல் காதல்’ மற்றும் ‘வேல் வேல்’ என 3 ஒரிஜினல் சிங்கிள்ஸ் பாடல்களை இசையமைப்பாளர் ப்ரவின் மணியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
அழகான பழைய அரங்கத்தை தேர்ந்தெடுத்து, அதை கிராமிய பாரம்பரிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் படி அலங்காரங்கள் செய்து, கனடா மற்றும் தமிழ் இசை ஆர்வலர்கள் பங்கேற்ற ‘மஞ்சள் வெயில்’ பாடல் உள்ளிட்ட 3 பாடல்களை அங்கே பதிவு செய்துள்ளனர். இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
“Manjal Veyil” Cover By Senthil Kumaran | Vettaiyadu Vilaiyadu –
https://www.youtube.com/watch? v=ydhfOsNSm54
“Vel Vel Vetri Vel” by Senthil Kumaran – Murugan Devotional / Music by Pravin Mani-
https://www.youtube.com/watch ?v=21W61z_vfDM