full screen background image
Search
Friday 28 March 2025
  • :
  • :
Latest Update

‘ட்ராமா’ திரை விமர்சனம்

‘ட்ராமா’ திரை ரேட்டிங்:2.5/5

ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் முன்னிரவில் திடீரென மின்சாரம் போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறார்.

அவரைக் கொன்றது யார்? என்பதை உயரதிகாரிகள் விடிவதற்குள் கண்டுபிடிப்பதுதான் டிராமா.

ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக அமைந்திருக்கின்றன.

சார்லி, வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவல்துறையினருக்குள்ளான மோதல்கள், காவல்நிலைய எதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்றன.

விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர் பொருத்தம். காவல்துறை உயரதிகாரிகளுக்கு உதாரணமாக அவரை வைத்துக் கொள்ளலாம்.

ஒரு காவல்நிலையம் ஓர் இரவு ஒரே ஷாட் என்கிற பல ஆபத்தான புதியமுயற்சிகளைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் அஜுகிழுமலா.

அதனால், காட்சிகள் மெதுவாகவும் சோதிக்கும் விதத்தில் இருந்தாலும் நடுநடுவே காதல், காமம், காவல்துறையிலேயே இருந்தாலும் பெண்களின் நிலை, திருநங்கைகளின் துடிப்பு ஆகியனவற்றைக் காட்டி சமன் செய்திருக்கிறார்கள்.

இறுதியில் சார்லி கொலை மற்றும் அதற்கான காரணம் வெளிப்படும்போது அதில் அடங்கியுள்ள கருத்து அதிர வைக்கிறது.

நீட் தேர்வு அதனால் ஏற்படும் மரணங்கள் ஆகியனவற்றைக் கண்முன் கொண்டுவரும் இறுதிக்காட்சியும் அதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் மரியா பிரின்ஸும் இது சாதாரண டிராமா இல்லை ஒன்றிய அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் பேசும் அழுத்தமான டிராமா என்று காட்டிவிட்டார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *