full screen background image
Search
Saturday 13 December 2025
  • :
  • :
Latest Update

‘டூடி’ பட விமர்சனம்

டூடி பட ரேட்டிங்: 2.5/5

கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சாம் ஆர் டி எக்ஸ் உடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் கார்த்திக் மது சூதன் நடித்துள்ள படம் டூடி.

ஸ்ரீதா சிவதாஸ், ஜீவரவி, அர்ஜுன் மணிகண்டன் அக்ஷதா, எட்வின் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதலியை வெறுக்கும் நாயகன் கார்த்திக் மதுசூதன். எந்த பெண்ணை பார்த்தாலும் அன்று இரவே அவளை படுக்கைக்கு அழைப்பது இவரது வாடிக்கை.

இந்த நிலையில் நாயகியை சந்திக்கிறார் அன்றே அவரிடமும் இதே கேள்வியை கேட்கிறார். முதலில் நாயகனை வெறுக்கும் நாயகி ஒரே வாரத்தில் காதலில் விழுகிறாள். முதலில் காதலை வேண்டாம் என்னும் சொல்லும் நாயகன் பின்பு காதலுக்கு ஓகே சொல்கிறார்.

ஆனால் நாயகியோ நான் ஏற்கனவே 5 வருடமாக ஒருவனை காதலித்து வருகிறேன் என தெரிவிக்கிறாள். இதனால் நாயகியை விட்டு விலகுகிறார் நாயகன்.

அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் கதை.

படத்தின் ஹீரோ அலட்டிகொள்ளாத எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோயின் ஸ்ரீதா சிவதாஸ் சிறப்பாக நடித்துள்ளார்.

மது சுந்தர்ராஜின் ஒளிப்பதிவும், பால சங்கரனின் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.

திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்கி இருப்பதோடு படத் தொகுப்பும் செய்து இருக்கிறார் சாம் ஆர் டி எக்ஸ்.

அழுத்தமான திரைக்கதையோ உணர்வுபூர்வமான காட்சிகள் இல்லை என்பதால் படத்துடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *