full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

JEPPIAAR ENGINEERING COLLEGE 17TH CONVOCATION presided over by the MP Dr.Thamizhachi Thangapandian,Dr. M. Regeena Jeppiaar & S. Murali.

JEPPIAAR ENGINEERING COLLEGE 17TH CONVOCATION presided over by the MP Dr.Thamizhachi Thangapandian,Dr. M. Regeena Jeppiaar & S. Murali

Jeppiaar Engineering College and Jeppiaar SRR Engineering College held its 17th Convocation on 3rd September 2022 with the blessings of Founder Chancellor Hon. Colonel Dr. JEPPIAAR. The convocation was presided over by the Chief Guest Dr.Thamizhachi Thangapandian, MP, Loksabha, Guests of Honor Thiru.S.Aravind Ramesh, MLA, Thiru. V.E. Mathiyalagan, Chairman, Zone 15, Greater Chennai Corporation, Hon. Chancellor, Dr. M. Regeena Jeppiaar, Jeppiaar University, President, Thiru. S. Murali, Jeppiaar University, Principal, Jeppiaar Engineering College,Dr. V.Natarajan, Principal, Jeppiaar SRR Engineering College Dr.M. Sasikumar and Dean Academics, Dr. Shaleesha.A.Stanley.

To encourage research, Incubation Grant of Rs.1 Crore was announced under “Jeppiaar Research and Development Organisation” (JRDO) in Jeppiaar Educational Trust for students, faculty, start-ups, small scale industries (SSI)etc.

A total of 1159 graduates, 75 Postgraduates received their degrees. Among them, 14 students were awarded with University Ranks and 4 students were given Trust Awards for their exemplary performance in academics.

Jeppiaar Engineering College maintains high and consistent Campus Recruitment statistics over the years. We are delighted to mention that 190 companies have visited us during the academic year batch 2017-2021 and 76% of our students have secured Job offers with an average CTC of 3.6 LPA and the maximum CTC of 7 Lakhs LPA. The eminent recruiters list includes Cognizant, Wipro, Infosys, Accenture, TCS, NTT Data, Motherson, Renault Nissan, Zifo R&D, Revature, HCL, Mindtree, Hexaware etc.

Addressing the graduation ceremony, Tamilachi Thangapandian called the students as female lions and male peacocks. The students cheered her on with their applause as she explained that female lions hunt and male peacocks have a beautiful plumage.She said that she was born to teacher’s parents, if she goes to her hometown, people will not call her a member of parliament, but will call her a teacher’s daughter. sHe said it would make her very happy. she elaborated on the importance of teachers, parents and students working as a triangle and Tamilachi Thangapandian said the bond between these three with various examples. she also emphasized that the students should return the help they can to the schools that have given them education.

Sholinganallur Assembly member Arvind Ramesh, Jeppiaar University Chancellor Dr. M. Regeena Jeppiaar , Jeppiaar University President Thiru. S. Murali and university administrators participated in this program.

கரிசல் காட்டு தமிழச்சி” என்பது தான் தனக்கு பெருமை என ஜேப்பியார் பல்கலைக்கழக 17வது பட்டமளிப்பு விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்

ஜேப்பியார் மற்றும் ஜேப்பியார் எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரிகளின் 17வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்த பட்டமளிப்பு விழாவில் 1159 பட்டதாரிகள், 75 முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்களில், 14 பேருக்கு பல்கலைக்கழக தரவரிசை விருதுகளும், 4 மாணவர்களுக்கு கல்வியில் முன்மாதிரியாக செயல்பட்டதற்காக நம்பிக்கை விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியின்போது, ஜேப்பியார் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் காப்பீட்டு மானியத்தை ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை வழங்கியுள்ளது.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய தமிழச்சி தங்கபாண்டியன் , பெண் சிங்கங்களே, ஆண் மயில்களே என மாணவ மாணவியர்களை அழைத்தார். பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும் என்றும் ஆண் மயில்களுக்கு தான் அழகான தோகை உண்டு என்றும் விளக்கமளித்த அவருக்கு மாணவர்கள் தங்கள் கைதட்டல்களால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆசிரியர் பெற்றோருக்கு பிறந்த தான் சொந்த ஊருக்கு சென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் என மக்கள் அழைக்க மாட்டார்கள் என்றும், ஆசிரியரின் மகள் என அழைப்பார்கள் என்றும் கூறிய அவர் அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் என்றார். ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் முக்கோணம் போல செயல்பட வேண்டியது குறித்தும், இந்த மூவரின் பிணைப்பு பற்றியும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் அவர் விரிவாக எடுத்துரைத்தார். பிள்ளைகள் தங்களுக்காக இருக்கும் பெற்றோரை விட தங்களுடன் இருக்கும் பெற்றோரைத்தான் விரும்புகிறார்கள் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார். மேலும் கல்வி கொடுத்த பாடசாலைகளுக்கு மாணவர்கள் தங்களால் ஆன உதவியை திரும்பச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், ஜேப்பியார் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் மு.ரெஜீனா ஜேப்பியார், பல்கலைக்கழக அதிபர் முரளி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *