Sivi 2 Movie Rating: 2.5/5
Sivi 2 movie Review: சிவி முதல் பாகத்தை போல பயமுறுத்தியதா சிவி 2? விமர்சனம் இதோ!
கடந்த 2007ம் ஆண்டு வெளியான சிவி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.காஞ்சனா 2 படத்தில் வருவதை போல பேய் இருப்பதாக ஃபேக்காக வீடியோ எடுக்கும் இளைஞர்கள் கூட்டம் யூடியூபில் அதை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். அவர்களை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் முதல் ஷாட்டிலேயே புகார் அளிக்கின்றனர். பணத்தாசை பிடித்த யூடியூபரை ஒருவர் நீங்க ஏன் அந்த பேய் ஆஸ்பத்திரின்னு சொல்ற இடத்துக்கே போய் வீடியோ எடுக்கக் கூடாதுன்னு சிக்க வைக்க, அங்கே சென்று வீடியோ எடுத்தவர்கள், திரும்பி வந்தார்களா? இல்லையா? என்பது தான் கதை.
தேங்காய் சீனிவாசன் பேரன் யோகி, ஜெயஸ்ரீ, அனுஜா நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான சிவி முதல் பாகத்தில், நாயகன் யோகிக்கு கழுத்தில் அதீத வலி இருக்கும். அமானுஷ்ய விஷயங்களை தேடிச் செல்லும் அவனுக்கு ஏன் அப்படியொரு வலி இருக்கிறது என்பதை கண்டறிய போராடுவான். கடைசியில் பேய் ஒன்று அவன் கழுத்திலேயே உட்கார்ந்து இருப்பதை காட்டும் போது ஒட்டுமொத்த ரசிகர்களும் திகில் அடைவார்கள். அதே போல இந்த படமும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்து சென்றவர்களை இயக்குநர் பெரிதும் ஏமாற்றி விட்டார்.தேங்காய் சீனிவாசன் பேரன் யோகி, ஜெயஸ்ரீ, அனுஜா நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான சிவி முதல் பாகத்தில், நாயகன் யோகிக்கு கழுத்தில் அதீத வலி இருக்கும். அமானுஷ்ய விஷயங்களை தேடிச் செல்லும் அவனுக்கு ஏன் அப்படியொரு வலி இருக்கிறது என்பதை கண்டறிய போராடுவான். கடைசியில் பேய் ஒன்று அவன் கழுத்திலேயே உட்கார்ந்து இருப்பதை காட்டும் போது ஒட்டுமொத்த ரசிகர்களும் திகில் அடைவார்கள். அதே போல இந்த படமும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்து சென்றவர்களை இயக்குநர் பெரிதும் ஏமாற்றி விட்டார்.
தேங்காய் சீனிவாசன் பேரன் யோகி, ஜெயஸ்ரீ, அனுஜா நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான சிவி முதல் பாகத்தில், நாயகன் யோகிக்கு கழுத்தில் அதீத வலி இருக்கும். அமானுஷ்ய விஷயங்களை தேடிச் செல்லும் அவனுக்கு ஏன் அப்படியொரு வலி இருக்கிறது என்பதை கண்டறிய போராடுவான். கடைசியில் பேய் ஒன்று அவன் கழுத்திலேயே உட்கார்ந்து இருப்பதை காட்டும் போது ஒட்டுமொத்த ரசிகர்களும் திகில் அடைவார்கள். அதே போல இந்த படமும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்து சென்றவர்களை இயக்குநர் பெரிதும் ஏமாற்றி விட்டார்.
சிவி முதல் பாகத்தை போல சிவி 2 கொஞ்சமும் புதிதாகவோ சுவாரஸ்யமாகவோ இல்லை என்பதே பெரிய மைனஸ். இயக்குநர் சிவி டைட்டிலுக்கே ரசிகர்கள் வருவார்கள் என நினைத்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை. ஒளிப்பதிவு, விஷுவல் மற்றும் திரைக்கதை ரீதியாக பல இடங்களில் படம் பயங்கரமாக அடி வாங்குகிறது. காமெடி கலந்த பேய் படங்கள் எல்லாம் வேண்டாம், த்ரில்லிங்கான பேய் படம் பார்க்கவே விரும்பும் ரசிகர்கள் தாராளமாக இந்த படத்தை ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்!