‘தேஜாவு’ திரைப்பட ரேட்டிங்: 3/5
நடிகர்கள்: அருள்நிதி, ஸ்மிருதி வெங்கட், மதுபாலா, அச்யுத் குமார்; இசை: ஜிப்ரான்; இயக்கம்: அரவிந்த் ஸ்ரீநிவாசன்.
அருள்நிதி, ஸ்மிருதி வெங்கட், மதுபாலா, அச்யுத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் தேஜாவு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த படத்தின் கதையை பற்றி ஏபிபி லைவ் இணையதளம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “டிஜிபி ஆஷாவின் (மதுபாலா) மகளை ஒரு மர்ம கும்பல் கடத்தி விடுகிறது. அவரை மீட்க, அலுவல்பூர்வமற்ற போலீஸ் அதிகாரி என்ற பெயரில் களத்தில் இறங்குகிறார் விக்ரம் குமார் ( அருள்நிதி). இந்த கடத்தலில் எழுத்தாளராக வரும் அச்யுத் குமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வர, அவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் நடக்கும் சம்பவங்களையும், அடுத்து விசாரணையில் தொடரும் சம்பவங்களையும், அவர் முன்னமே கதையாக எழுதி இருப்பது தெரிகிறது. இந்தக் கதைக்கும் அந்த கடத்தல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு, இறுதியாக விக்ரம் ஆஷாவின் மகளை கண்டுபிடித்தாரா, கடத்தல் சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார், ஏன் அந்த கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்தான் மீதிக்கதை”.
இப்படத்தின் கதை மற்றும் களம் பெரிய பலமாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது, இதற்கு மேலும் வலுசேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவரின் பின்னணி இசை கதையின் போக்கை மேலும் சுவாரஸ்யப் படுத்துகிறது. கமெர்ஷியல் படங்களுக்கான கலருடன் காட்சிப்படுத்தப்பட்ட PG முத்தையாவின் ஒளிப்பதிவு நிறைவு. அதேபோல், கிரைம் த்ரில்லர் படங்களுக்கான அந்த டுவிஸ்ட் மற்றும் சுவாரஸ்யத்துடன் கூடிய எடிட்டிங்குடன் படத்தை எடிட் செய்துள்ளார் அருள் E சித்தார்த்.
மேற்கூறியது போல இப்படத்தின் கதைக்களம் சுவாரஸ்யமானதாக இருப்பினும், திரைக்கதையில் சற்று தடுமாரியுல்லார்களோ என்கிற உணர்வு ஏற்படுகிறது. படத்தின் முதல்பாதி விறுவிறு என போக, இடைவேளையில் பரபரப்புடன் முடிய, இந்த பரபரப்பை இரண்டாம் பாதியில் தக்கவைத்துக் கொள்ள தடுமாறியுள்ளனர், அதனாலே சில காட்சிகள் ஒட்டாமல் செல்கிறது. மேலும், கதைக்காக நினைத்து இவர்கள் வைத்துள்ள சில காட்சிகள் ஏதோ படத்தை முடிக்கனுமேனு திணித்தது போல தான் தெரிகிறது. இதுபோக வழக்கம்போல சில லாஜிக் குறைகளும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.போலீஸ் அதிகாரியாக வரும் மதுபாலா, நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கதையாசிரியராக வரும் நடிகர் அச்யுத் குமார் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
பூஜாவாக நடித்துள்ள நடிகை ஸ்ம்ருதி வெங்கட் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் பதிகிறார் காளி வெங்கட். சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். குழப்பம் இல்லாத திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை வியப்படைய வைத்திருக்கிறார். அறிமுக படத்திலேயே சிறந்த முயற்சியை கையாண்ட இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுக்கு பாராட்டுகள். லாஜிக் மீறல்கள் இருந்தாலும், பெரியதாக தெரியவில்லை.
ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முத்தையாவின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் ‘தேஜாவு’ விறுவிறுப்பு.
Dejavu Stills & Cast Crew List
CAST:
Arulnithi as Vikram
Madhoo (Madhubala) as Asha promod
Achyuth Kumar as Writer Subramani
Smruthi Venkat as pooja
Chetan as Chetan P.A
Ragav Vijay
Kali Venkat as Constable Ezhumalai
Mime Gopi as Inspector Jagadeesh
Supergood Subramani as Constable Divakar
Harwin Ram as Siddharth
Maria Vincent
Chenthu Mohan as Praveen
CREW:
Director: Arvindh Srinivasan
Producer: Vijay Pandi K
Co-Producer : PG Muthiah
Music Composer: Ghibran
Cinematographer: PG Muthiah
Lyrics: Viveka
Editor: Arul E Siddharth
Art Director: Vinoth Raveendran
Stunt: Pradeep Dinesh
Atmos Mix: Harish
Stills: Manivannan
DI: Cuviam Studios
Colorist: Shanmuga Pandian M
VFX: Aksha Studios
PRO: Sathish (AIM)
Sound Design – Naveen Shankar, Guna SD.
VFX Supervisor – R Neetesh Kumar
Publicity Designs: Thandora
Production Executive: Uma Maheswara Raju
Production Controller: Ravi Chandran K
Executive Producer: Anto L
Banner: White Carpet Films In association with PG Media Works