மைடியர் பூதம் திரைப்பட ரேட்டிங்:3/5
மை டியர் பூதம் !
திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
இயக்கம் : இராகவன் !;
இசை : இமான் ; !
நடிப்பு : பிரபுதேவா!
வசனம் தேவா.!
பூதலோக அரசன் கர்கி (பிரபு தேவா) தனக்கு வாரிசு இல்லையே என்று கவலை கொள்கிறது. அவரது கவலையை போக்கும் விதமாக கிங்கினியா என்ற மகன் பிறக்கிறான். அவனுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் கர்கி செய்கிறது. ஒரு நாள் விளையாட்டாக மகரலோகம் செல்ல வேண்டும் என்று மகன் கேட்க அவனை அங்கு அழைத்துச் செல்கிறது கர்கி. கிங்கினியா விளையாட்டாக பாம்பு புற்றுக்குள் ஒளிந்துக் கொள்ள அவனை கண்டு பிடிக்க புற்றுக்குள் கர்கி செல்கிறது. அங்கு நீண்ட கால தவத்தில் இருந்த முனிவரின் தவம் இவர்களால் கலைந்து போக முனிவர் கோபம் அடைந்து கிங்கினியாவுக்கு சாபம் தர முடிவு செய்கிறார். முனிவரிடம் மன்னிப்பு கேட்கும் கர்கி தன் மகனுக்கு சாபம் தராமல் மன்னித்து அந்த சாபத்தை தனக்கு தரும்படி கெஞ்சுகிறார். அதை ஏற்கும் முனிவர், கர்கியை சிலையாக மாறி பூலோகத்தில் தொலைந்து போவாயாக என்று சபிக்கிறார். யாராவது ஒருவன் சிலையிலிருந்து உன்னை விடுவித்தால் 48 நாட்களுக்குள் சிலையில் உள்ள மந்திரத்தை சொன்னால் மீண்டும் நீ பூத லோகம் வரலாம். இல்லாவிட் டால் காற்றோடு காற்றாக கலந்து இறந்துபோவாய் என்கிறார். சாபத்தின்படி பூலோகத்தில் சிலையாக தொலைந்து போகும் கர்கியை பள்ளி மாணவன் அஸ்வத் விடுவிக்கி றான். அவனை கடவுளாக கருதும் கர்கி அஸ்வத்தை மகிழ்விக்க பல மாயாஜாலங் கள் செய்துகாட்ட அதில் அஸ்வத் மகிழ்ச்சி அடைகிறான்.திக்குவாய் குறைபாடு கொண்ட அஸ்வத் சிலைக்குள் இருந்த மந்திரத்தை சொல்லி கர்கியை அழிவிலிருந்து காபாற்றுகிறானா என்பதற்கு சென்டிமென்ட்டான பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
தமிழில் குழந்தைகளுக்கான மாயாஜால படம் என்ற வகையில் மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு பிறகு வேறு பெரிதாக எந்த படமும் வந்தது போல் தெரியவில்லை. அந்த குறையை போக்கும் விதமாக வந்திருக்கிறது மை டியர் பூதம்.பூதம் என்றவுடன் ஏதோ குழந்தைகளை பயப்படச் செய்யும் படமோ என்று எண்ணத்தையில்லை இந்த பூதம் குழந்தைகளை மகிழ்விக்கும் சூப்பர் பூதம்.
கர்கி பூதமாக பிரபுதேவா வேடமேற்றி ருக்கிறார். இதற்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். தலையை மொட்டையடித்து உச்சியில் ஒரு குடுமி வைத்துக்கொண்டு .வெள்ளை உடை அணிந்து குழந்தைகளை கவரும் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
சிலையிலிருந்து உடைந்து விடுதலை யாகி வரும் பிரபுதேவா பெரிய உருவத்தில் இருக்க அதைக்கண்டு அஸ்வத் பயந்து ஓடுவதும் அவனது பயத்தை போக்க சுட்டித்தனமாக பல வேடிக்கைகளை பிரபு தேவா செய்து காட்டுவது குழந்தைகளை கைகொட்டி சிரிக்க வைக்கும்.
திக்கிப்பேசும் அஸ்வத் பேச்சு போட்டியில் கலந்துகொண்டு மேடையில் பேச முடியாமல் திணற அவனுக்கு பின்னர் பிரபுதேவா பூதம் தரும் தன்னம்பிக் கையை கொண்டு மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு திறமையை வெளிப் படுத்துவது இளம் குழந்தைகளுக்கு மனதில் தன்னம்பிக்கை விதை விதைக்கும்.
படத்தை முழுவதுமாக பிரபுதேவாவும் அஸ்வத்தும் தான் தாங்கிச் செல்கின் றனர். இருவரும் உயரே பறக்கும் பலூன் மீது அமர்ந்து அடிக்கடி பேசுவதும் பின்னர் பள்ளிக்கு சென்று மாயவித்தைகள் செய்வதும் பரவசம்.
கிளைமாக்ஸில் பிரபுதேவா காற்றில் கரைந்துகொண்டிருக்க தனது திக்குவாய் பிரச்னையால் மந்திரம் சொல்ல முடியாமல் அஸ்வத் கதறுவது உருக்கம்.
அஸ்வத் தாயாக ரம்யா நம்பீஸன் நடித்திருக்கிறார். அவருக்கு பெரிதாக வேலையில்லாவிட்டாலும் அவர் மூலம் குறைபாடுள்ள குழந்தைகளிடம் ஒரு தாய் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற படிப்பினையை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை படத்தை தயாரித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் யூ கே செந்தில்குமார் ஒரு இடத்திலும் குழந்தைகளை பயமுறுத்தும் வகையில் காட்சிகளை வைக்காமல் முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் வண்ணமயமாக காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக் குரியது.
டி.இமான் இசை காட்சிகளை ரசிக்க வைத்தாலும் இன்னுகூட குழந்தை களுக்கான காமெடி இசைகளை உருவாக்கி கையாண்டிருக்கலாம்.
இயக்குனர் என்.ராகவன் சொல்லவந்த கதையை குழப்பாமல் நேரடியாக சொல்லி குழந்தைகளும் கதையை திரும்ப சொல்லும் அளவுக்கு எளிதான திரைக்கதை அமைத்திருப்பது நலம்.
மை டியர் பூதம் – குட்டீஸ்களை கவரும் கலர்புல் பூதம்.