டி ப்ளாக் திரைப்பட ரேட்டிங்: 2.5/5
பிரபல யூடியூப் சேனலான ‘எரும சாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடிக்கும் திரைப்படம் ‘டி பிளாக்’. ரத்தன் யோகான் இசையமைக்க, தயாரிப்பையும் ஒளிப்பதிவையும் அரவிந்த் சிங் செய்துள்ளார்.
நடிப்பு: அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, சரண்தீப், தலைவாசல் விஜய், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா, ஆதித்யா கதிர், விஜய்குமார் ராஜேந்திரன் மற்றும் பலர்
இயக்கம்: விஜய்குமார் ராஜேந்திரன்
இசை: ரோன் ஈத்தன் யோகன்
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா
கல்லூரி வளாகத்தில் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கும் மாணவர்களுக்கு ஒரு பிரச்சனையாக வருகிறது ஹாஸ்டலில் வரிசையாக நடக்கும் மாணவியின் மரணம், நடக்கும் இந்த மரணத்தை தட்டி கேட்கும் அருள்நிதி இதற்கான தீர்வை கண்டரா? இதில் இருக்கும் திகிலான மர்மம் என்னா? என்பதை நகைச்சுவை மற்றும் திரிலிங்கும் கலந்த போக்கில் இருப்பது தான் ‘டி ப்ளாக்’ படத்தின் கதைக்களம் ஆகும்.
நகைச்சுவையாக நாம் கூறும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கல்லூரி என்பதுபோல் ‘டி ப்ளாக் படத்தின் கல்லூரி உள்ளது, வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் கல்லூரியின் ஹாஸ்டலில் வரிசையாக மாணவிகள் மரணம். மர்மமான முறையில் நடக்கும் மரணத்தின் பிண்ணனி பற்றிய தகவலை அறிய அருள்நிதி போராடுவதும் கதையின் திரிலிங்கான மெண்டீரியல் ஆகும்.
கல்லூரி மாணவர்களின் ஜாலியான லைப் பற்றி நமக்கு தெரிந்தாலும் அவர்களுக்கு நடக்கும் சில கடினமான கண்டிப்புகளின் விளைவு தான் மையமாகக் கொண்டது தான் ‘டி ப்ளாக்’ திரைப்படம்.கண்டிப்பான ஹாஸ்டல் வார்டனாக வரும் உமா ரியாஸ் அவர்கள் மாணவிகளிடையில் 5:45 குள் ஹாஸ்டல்குள் இருக்க வேண்டும் இரவு 9:00 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது என்ற கண்டிப்பில் நடக்கும் மரணம் அதை சுற்றி நடக்கும் மர்மம் அதை மறைக்க நினைக்கும் கருபழனி அப்பன் ஒருபுறம் அதை வெளிக்கொண்டு வரத் துடிக்கும் அருள்நிதி இடையில் நடக்கும் போராட்டமே ‘ டி ப்ளாக்’ ஆகும்.
கதைக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு படத்துக்கும் மெனக்கிடுவது போல, இந்தப்படத்துக்கும் மெனக்கித்திருக்கிறார் அருள்நிதி. ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் என்பதால் உடல் எடையைக் குறைத்து ஹேன்ட்சம் லுக்கில் அட்டகாசமாக இருக்கிறார். ஹீரோயின் அவந்திகா மிஷ்ரா, இயக்குனர் விஜயகுமார் ராஜேந்திரன், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, சரண் தீப் எல்லோரும் தங்கள் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். ஒரு சீன்தான் வருகிறார், ஆனாலும் தனது டயலாக்ல கவனம் ஈர்க்கிறார் கரு. பழனியப்பன். அதிலும், அந்த வில்லன் கேரக்டர்சேஷன் பயத்தில் எகிற வைக்கிறது.சில காட்சிகளை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு, விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். எனினும், படத்தின் ஒன்லைன் நன்றாக இருந்தாலும், கதை கட்டமைப்பு மற்றும் திரைக்கதை ஆழமானதாக இல்லை. இரண்டாம் பாதியில் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் கூட்ட இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தின் சஸ்பென்ஸ் மற்றும் திகில் காட்சிகளுக்கு பின்னணி இசை உயிர் கொடுத்திருக்கிறது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
’டி ப்ளாக்’ – பார்க்கலாம்!