படம்: பட்டாம்பூச்சி
நடிப்பு: சுந்தர்.சி, ஜெய், ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி
தயாரிப்பு: அவினி டெலி மீடியா குஷ்பு சுந்தர்
இசை: நவநீத் சுந்தர்
ஒளிப்பதிவு :கிருஷ்ணசாமி
இயக்கம்: பத்ரி
பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்
‘பட்டாம்பூச்சி’ திரைப்பட ரேட்டிங்:3/5
சீரியல் கில்லர் ஒருவரின் கொலைகளையும், அதற்கான காரணங்களையும் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் தான் பட்டாம்பூச்சி.
1989-ல் நடக்கும் கதை. தூக்கு கைதியான ஜெய்யிடம் கடைசி ஆசை என்ன என்று கேக்க, என்னைப் பற்றி எழுதிய ரிப்போர்டரை சந்திக்க வேண்டும் என்கிறார். ரிப்போர்டரிடம் செய்யாத கொலைகளுக்காக என்னை தூக்கில் போட போகிறார்கள், இந்த கொலையை தான் நான் செய்யவில்லை. ஆனால் பல கொலைகளை செய்த பட்டாம்பூச்சி நான் தான் என கூறி ட்விஸ்ட் கொடுக்கிறார்.
அதிர்ச்சி அடையும் உயர் அதிகாரிகள் அதுபற்றிய விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை போலீஸ் அதிகாரி சுந்தர் சியிடம் ஒப்படைக்கின்றனர். அவர் அதனை கண்டுபிடித்கிறாரா? ஜெய்க்கும் , சுந்தர்சிக்கும் இடையில் நடக்கும் மோதலின் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் அதிர்ச்சிகரமான பதில் அளிக்கிறது
மென்மையான காதல் நாயகனாக நடித்துவந்த ஜெய்க்கு இதில் வில்லன் பாத்திரம் அதுவும் சைக்கோ கொலைகாரன் பாத்திரம்… வில்லத்தனம் நிறைந்த பாத்திரத்தை எப்படி செய்வாரோ என்று எண்ணும்போது எதிர்பாராத ஆக்ரோஷம் காட்டி அசத்திவிடுகிறார்.
சிறுவயதில் தந்தையிடம் துன்பறுத்தலுக்குள்ளான. ஜெய் யாரெல்லாம் தந்தையை புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களையெல்லாம் வரிசையாக போட்டுத்தள்ளுகிறார்.
ஒவ்வொரு கொலை செய்தபிறகும் பட்டாம்பூச்சிபோல் இரண்டு கைகளையும் விரித்து பறப்பதுபோல் ஸ்டைல் செய்கிறார்.
ஆஜானபாகு தோற்றத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக. சைக்கோ கொலையாளி பற்றி துப்புதுலக்குகிறார். முறைப்பும், விரைப்பும், விசடரணையுமாக பிஸியாக இருக்கிறார்
ஹனிரோஸ் பத்திரிகையாளராக வருகிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
படத்தின் முதல் பாதி கொடூர கொலைகள் விசாரணை என பறக்கும் கதை இரண்டாம் பாதி முழுவதும் ஜெய் சுந்தர் சியின் மோதலாக பரபரக்கிறது.
க்ரைம் கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு செய்துள்ளார் கிருஷ்ணசாம
அவ்னி டெலி மீடியா குஷ்பு சுந்தர் தயாரித்திருக்கிறார். சைக்கோ த்ரில்லர் கதையை விறுவிறுப்பு குறையாமல் இயக்கி உள்ளார் பத்ரி.
நவ்நீத் சுந்தர் பின்னணி இசை பலம்.
பட்டாம்பூச்சி- சைக்கோ த்ரில்லர்